(நூருல் ஹுதா உமர்)
சோதனை மேல் சோதனையை அனுபவிக்கும் மீன்பிடித்துறை
‘கடலுக்குள் போனால் பிணம் வெளியே வந்தால் பணம்’ எனும் பழமொழியின் அர்த்தத்தை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதுதான் இந்தக் கட்டுரையின் வாசல் கேள்வியாகும்.
The Formula
நாட்டில் மேலும் 3,110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 388,806 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18,769 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 342,159 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 39,661 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேவேளை, மேலும் 198 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 7,183 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(அ. வரதராஜா பெருமாள்)
சர்வதேச சமநிலையில் இலங்கையின் வறுமைக் கோடு
சர்வதேச பண்டக் கொள்வனவு சக்தி மதிப்பீட்டின்படி இலங்கையின் வருடாந்த தலாநபர் வருமானம் தற்போது 3850 (அமெரிக்க) டொலர் (2019ல்). இது அமெரிக்காவில் 13200 டொலர் வருமானம் பெற்று சீவிப்பதற்குச் சமன் எனக் கணிப்பிடப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு. இதே உலக வங்கி 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமெரிக்க குடும்பத்தின் வறுமைக் கோட்டு எல்லையின் மாதாந்த வருமானத்தை சுமார் 2000 டொலர்களெனக் குறிக்கிறது. அதாவது அவ்வாறானதொரு அமெரிக்க குடும்பம் வறுமைக் கோட்டின் எல்லையில் வாழ வேண்டுமேயாயினும் அதற்கு வருடத்துக்கு 24000 டொலர்கள் வருமானம் தேவை என ஆகின்றது. அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையானது 2018ம் ஆண்டு விலைகளின்படி 4 பேர் கொண்ட குடும்பத்துக்கான வறுமைக் கோட்டு எல்லையை அமெரிக்கா முழுவதற்குமான சராசரியாக 25000 டொலர்களென வரையறுத்திருந்ததை இங்கு கவனத்திற் கொள்வது அவசியமாகும்.
(கா.சு. வேலாயுதன்)
என் மகள் அப்போது மூன்று வயதுக் குழந்தை. அவளை கக்கத்தில் போட்டுக் கொண்டு சிங்கநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் பஸ்ஸுக்காக நிற்கிறார் என் மனைவி. திடிரென்று போலீசார் சாரிசாரியாக வாகனங்களை ஓரங்கட்டி நிறுத்தச் சொல்கிறார்கள். யாரோ விவிஐபி வரப்போகிற பரபரப்பு. சாலையோரம் காங்கிரஸ் கொடி தாங்கி தொண்டர்கள். தூரத்தில் பயலட் வண்டி முன்வர சயரன் சத்தத்துடன் வாகன வரிசை. சிகப்பு விளக்குகள் சுற்றல். மூன்றாவது வாகனத்தில் பளிச்சென்று தங்க ஜொலிப்பில் அந்த முகம். மனைவியின் முகத்தில் பிரகாசம். ‘அங்கே பாரு சாமி. ராஜீவ் காந்தி மாமா. டாட்டா சொல்லு’ குழந்தைக்கு கை காட்டுகிறாள் தாய். மகளும் கை காட்டி சிரித்து, டாட்டா காட்டுகிறார்கள். சாலையோரம் கைகாட்டியவர், கை கொடுத்தவர்கள், சால்வை, சந்தன மாலை தந்தவர்கள்…
ஐக்கிய அரபு அமீரகத்தில், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கானி அடைக்கலம் புகுந்துள்ளதாக அமீரகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நோக்கி தலிபான்கள் முன்னேறிய நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு ஜனாதிபதி கானி கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறியிருந்தார். இந்நிலையில், ஜனாதிபதி கானியையும், அவரது குடும்பத்தையும் மனிதாபிமான அடிப்படைகளில் வரவேற்பதாக அமீரகத்தின் வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, பாரியளவு பணத்துடன் தான் அமீரகத்துக்கு பயணமானதான வதந்திகள் முழுமையாக அடிப்படையற்றவை, பொய்கள் என ஜனாதிபாதி கானி குறிப்பிட்டுள்ளார்.
மகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு அமைவாக நாட்டை ஒருவாரத்துக்கு முழுமையாக முடக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். இதுதொடர்பில், மகாநாயக்கர்களுக்கு தெளிவுப்படுத்தியதன் பின்னர், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உத்தியோபூர்வமாக அறிவிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இன்றிரவு 10 மணிமுதல் நாடு முடக்கப்படும் என சுகாதார அமைச்சர கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஆனால், அத்தியாவசிய சேவைகள் யாவும் இயங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.