செரினாவை நினைத்தவுடன் எனக்கு ஞாபகத்திற்கு வருகிற முதல் காட்சியென்பது, குக்கூ நிலத்தின் மண்கட்டிடத்துள் ஒரு சிறு அகல்விளக்கு முன்பாக, நான்கைந்து மணிநேரங்கள் முழங்காலிட்டுப் பிரார்த்தித்த குரலும், கண்ணீரோடு கூடிய விம்மல் சத்தமும் சேர்ந்த அன்றைய தினம்தான்! ஆனந்த விகடன் இதழால் சாத்தியமடைந்துள்ள இக்காணொளி, மனதிற்குள் மிகுந்த நெகிழ்வையும், பரவசத்தையும், நம்பிக்கையையும் உண்டாக்குகிறது. இதனை நிகழ்த்தித்தந்த தோழமை வெ. நீலகண்டன் அவர்களுக்கு எங்கள்கரங்குவிந்த நன்றிகள்!
Month: September 2021
ஐக்கிய நாடுகள் சபையில் கோட்டாவின் அறிவிப்புகளும் அபத்தங்களும்
உள்ளகப் பொறிமுறை ஊடாகப் பாதிக்கப்பட்ட (தமிழ்) மக்களுக்கு நீதி வழங்க முடியும் என்று, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரஸ்தாபித்திருக்கிறார். அத்தோடு, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக, புலம்பெயர் (தமிழர்கள்) தரப்புகள் முன்வர வேண்டும் என்றும் கோரியிருக்கின்றார்.
தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் விரைவில் விடுதலை
தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ விரைவாக நடவடிக்கை எடுத்து வருகின்றார் எனத் தெரிவித்த இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இளைஞர்களை கைதுசெய்து தடுத்து வைக்கவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை
என்றார்.
தோழர் சுசீலா
(Rathan Chandrasekar)
கட்சி அரசியலிலிருந்து நான் தூர வந்தபிறகும் –
தம் சுய வாழ்வை பின்னிருத்தி –
ஒரு நம்பிக்கையின்பாற்பொருட்டு –
அதுவும், இந்த நுகர்வுக் கலாச்சார உலகில் – சமூகத்துக்கென இயங்கிக்கொண்டேயிருக்கும் மனிதர்கள் – வியப்புக்கும், மேலாக மரியாதைக்கும் உரியவர்களாக மனதுள் அமர்ந்துகொள்கிறார்கள்.
டானியலும் சண்முகதாசனும் தேவை
ஐ.நாவில் பங்கேற்க தலிபான்கள் ஆர்வம்
முடக்கத்துக்குள் சாதனை
(வ. சக்திவேல்)
“பயன்பாட்டுக்கு உதவாமல், கழிக்கப்பட்ட பொருட்களை வைத்துக் கொண்டு, அதாவது, இரண்டு சக்கர உழவு இயந்திரத்தின் எஞ்சின், கியர் பெட்டி, போன்றவற்றையும் ஏனைய உதிரிப்பாகங்களையும் தேடி எடுத்து, முற்றாக புதிய வடிவிலான, சிறிய அளவிலான உழவு இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளேன். குறைந்த அளவில் விவசாயம் செய்பவர்களுக்கு, இந்த உழவு இயந்திரம் உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இதனை மேற்கொண்டேன். நான் உருவாக்கிய இந்தப் புதிய உழவு இயந்திரத்திரத்துக்கு, அரசாங்கம் அதற்குரிய பதிவுச் சான்றிழைப் பெற்றுத்தந்தால், மென்மேலும் விவசாயத்துக்குத் தேவையான கருவிகளையும் இயந்திரங்களையும் உருவாக்க முடியும்” என்கிறார், மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி கோகுலரஞ்சன்.
கல்முனையில் வாள்வெட்டு; காணொளியில் பதிவு
ஞானசார தேரரின் “சூத்திரதாரி” கருத்தால் சர்ச்சை
நியூஸிலாந்து பொலிஸாரினால் விடுதலைச் செய்யப்பட்ட ஒருவரே, மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளார். அவரிடம் ஐ.எஸ். சிந்தனை இருந்திருக்கிறது. ஒவ்வொரு முஸ்லிம்களிடத்திலும் ஐ.எஸ் சிந்தனை இருக்கும். யாரிடம் இருக்கிறது, யாரிடம் இல்லையென கண்டறிய முடியாது எனத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரர் சரத் வீரசேகர, ஐ.எஸ். சிந்தனை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்” என்றார்.