பிளவுபட்ட உலகில் மீண்டும் ஒரு புதிய பனிப்போரை உருவாக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. அமைதியை பின்பற்றும் எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
Month: September 2021
இலங்கை: கொரனா செய்திகள்
கனடியத் தேர்தல் நாள் இன்று
(சாகரன்)
உலகில் முதன்மைத் தொகை புலம்பெயர் இலங்கைத் தமிழரைக் கொண்டிருக்கும் கனடாவில் இன்று பொதுத் தேர்தல். கடந்த 2 வருடங்களாக சிறுபான்மை அரசாக செயற்பட்டு வந்த ஜஸ்ரின் ரூடோவின் லிபரல் கட்சியின் ஆட்சி அவர்களாலேயே வழமையான தேர்தல் காலத்திற்கு இரு வருடங்கள் முன்பே கலைக்கப்பட்டு நடைபெறும் தேர்தல் இது . கடந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெறமுடியாத காரணத்தால் பெரும்பான்மை பெற்ற இந்தக் கட்சி புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் தனது ஆட்சி நடாத்தி வந்தது.
ஆப்கானிஸ்தான்: பாடசாலையில் மாணவிகளுக்கும் ஆசிரியைகளுக்கும் தடை
எங்கே இந்தக் கிராமங்கள்?
’பட்டமளிப்பு நிகழ்வை நிராகரிக்கின்றோம்’
நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு நிகழ்வை முழுமையாக நிராகரிக்கின்றோமென, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்று (20) வெளியிட்ட அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 9)
(அ. வரதராஜா பெருமாள்)
இலங்கை அரசின் பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு அவசியமான வருமானத்தை திரட்டுவது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் கடமை. அதனை நீதியான வரி வகைகள் வழியாக, மற்றும் வரிகளற்ற ஏனைய நியாயமான முறைகள் மூலமாக திரட்டுதலும் அரசாங்கத்தின் பொறுப்பான கடமையாகும். இவற்றை முறையாகவும் சரியாகவும் கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்த அத்தனை அரசாங்கங்களும் இப்போது பதவியிலுள்ள அரசாங்கமும் செய்யவில்லை. அதன் விளைவாக, இலங்கையின் தேசிய பொருளாதார சக்திக்கு உரிய அளவில் எந்தளவு விகிதாசாரத்தை அரச வருமானமாக அரசாங்கம் திரட்டியிருக்க வேண்டுமோ அதைவிட மிக மிகக் குறைவாகவே அரச வருமானம் இருக்கின்றது. இந்த விடயங்களை கடந்த தொடரில் அடையாளம் கண்டிருந்தோம்.
வறுமையின் பரிசு கல்விக்கு விடை
(மகேஸ்வரி விஜயனந்தன்)
கொடிய கொரோனாவால் முழு உலகமும் முடங்கியது என்றாலும், தடுப்பூசி, சுகாதார பாதுகாப்புகளை அதிகரித்து முடக்கத்திலிருந்து மீண்டு, அந்தந்த நாடுகள் வழமை நிலைக்குத் திரும்பினாலும் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் இதன் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் திணறிப் போயுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் சீன சைபர் உளவாளிகள் நியமனம்
வேட்டி பற்றிய கனவு
(மொஹமட் பாதுஷா)
‘வேட்டி பற்றிய கனவில் மூழ்கியிருந்த போது, கட்டியிருந்த கோவணமும் பறிபோனது’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, தற்போது அரசியல், சமூக, பொருளாதார பரப்புகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவும் அதனால், மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள அவதிகளும், அச்சொட்டாக பொருந்திப்போவதுபோன்ற போக்குகளே காணப்படுகின்றன.