பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்: தலிபான்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான்கள் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் முழுவதும் மறுக்கபட்டு வருகிறது. தலிபான்களின் ஆட்சியில் பெண்கள் யாருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. 

எதிர்காலத்தில் விலை மேலும் அதிகரிக்கும்

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக எதிர்காலத்தில் அவற்றின் விலைகள் அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய சந்திரிக்கா

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

புலிகளின் குற்றங்கள்: சுமந்திரன் அதிரடி பதில்

தமிழீழ விடுதலைப்  புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு  கடிதம் அனுப்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார் .

‘பின்லேடனின் மகன் என்பதால் ராஜ வாழ்க்கை வாழவில்லை‘

” பின்லேடனின் மகன் என்பதால் ராஜ வாழ்க்கை வாழவில்லை” என அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஓமர் பின்லேடன் தெரிவித்துள்ளார். பிரபல ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த நேர்காணலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

க்வாதாரில் அரசுக்கு எதிராக புரட்சி வெடித்தது

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண துறைமுக நகரமான க்வாதாரில் அரசுக்கு எதிரான புரட்சி வெடித்தது. மக்கள் தண்ணீர் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை மற்றும் க்வாதாருக்கு அருகிலுள்ள கடலில் சட்டவிரோத மீன்பிடி (அங்கு பெரும்பாலும் மக்கள் மீன்பிடியை நம்பி வாழ்பவர்கள்)  போன்றவற்றை  எதிர்த்தே  இந்த போராட்டத்தை நடத்தினர்.

`இருப்பை பாதுகாத்து முன்னோக்கி நகர்வோம்`

“மலையக மக்களின் இருப்பை சிதைத்து, வாழ்வாதாரத்தை அழித்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் அடிமைகளாக வைத்துக்கொள்வதற்கான நகர்வையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக” ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

பிரமந்தனாறுகுளக் காணிகளும் பறிபோகும் அபாயம்

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு குளத்தின் நீரேந்து பகுதிகள் மற்றும் அந்தக் குளத்தின் கீழ் நீண்ட காலமாக பயிர்ச் செய்கை மேற்கொண்டு வந்த விவசாய காணிகள் என்பன வனவளத்  திணைக்களத்தால் எல்லையிடப்பட்டுள்ளன.

’இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும்’

இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியுமென், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். கிளிநொச்சி ஊடக மையத்தில், இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இப்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழரசு கட்சி தனித்து பயணிக்கக்கூடியதான நிலைப்பாட்டில் உள்ளது. இதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சாதக பாதக நிலை தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர் வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இதில் ஒரு நன்மை இருப்பதாகவும் இதனுடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் எனவும் கூறினார்.

புலமைப்பித்தன்!

கதையின் நாயகியான அவள் அத்துணை அழகு.
அழகின் குவியல்.
ஆயிரம் நிலவுகளின் பொலிவு ஒருசேர இருந்த அவளை
‘ஆயிரம் நிலவே வா!’ என்று ஒருமையில் அழைத்தார்
புலவர் புலமைப்பித்தன்.
அந்த வரியே ஒரு கவிதை.
அதுவே ஓர் இலக்கியம்.