ஆப்கானிஸ்தானின் நிலவரத்தை உற்றுநோக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு, தாலிபான்களால் கெரில்லா போர் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, ஒரு அரசாங்கத்தை நிறுவி அதனை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்பே. இதற்கு விடை காண்பதற்குக் குறைந்தபட்சம் 6 மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டும். அதே வேளையில், பயங்கரவாதத்தால் ஒரு ஜனநாயக அரசு வீழ்த்தப்பட்டு, மாறுபட்ட ஓர் அரசைச் சர்வதேசச் சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலானது, வருங்காலங்களில் இவ்வகையான அரசியல் முறைகள் அனைவருக்கும் ஏற்புடையதாகிவிடக் கூடும் என்ற அச்சத்தை எழுப்புகிறது.
Month: September 2021
ஆப்கனில் இடைக்கால அரசு அமைந்ததில் மகிழ்ச்சி: உலகமே மவுனம் காக்க சீனா கருத்து
மயக்கம் தரும் அவசரகாலச் சட்டம்
(எம்.எஸ்.எம். ஐயூப்)
அத்தியாவசிப் பொருட்களின் சீரான விநியோகத்தை நோக்கமாகக் கூறி, ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி, அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்தார். ஆனால், அதன் முக்கியத்துவத்தையோ பாரதூரத் தன்மையையோ, தமிழ்ப் பத்திரிகைகள் தவிர்ந்த இந்நாட்டின் ஏனைய ஊடகங்கள் காணவில்லைப் போலும்!
கட்டுப்பாட்டை மீறினால்? ஜனாதிபதியின் அறிவிப்பு
அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்காத பெரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளைக் கைப்பற்றி அவசரகால விதிமுறைகளின் கீழ் கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
உறுதிமொழிகளை தலிபான்கள் காப்பாற்றுவார்களா?
ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களான தலிபான்களின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்றபடி மிகவும் பிரபலமான தனியார் தொலைக்காட்சி வலைத்தளம் அதன் அபாயகரமான துருக்கி சோப் ஒப்பேரா மற்றும் இசை நிகழ்ச்சிகளை டேமர் நிகழ்ச்சியுடன் இணைத்துள்ளது. தலிபான்கள் தமது எண்ணங்களுக்கு ஏற்ப ஊடகங்களுக்கு சட்டதிட்டங்களை வெளியிட்டுள்ளனர்.
’இஸ்லாமிய எமிரேட்’ உதயம்: புதிய பிரதமராக முல்லா நியமனம்
ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தை அறிவித்துள்ள தலிபான்கள், அந்த நாட்டை “இஸ்லாமிய எமிரேட்” என்று அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் இடைக்கால பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த் இருப்பார் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
மம்மூட்டி
(Rathan Chandrasekar)
இப்போது அல்ல. 87, 88 இருக்கும்.
தூர்தர்ஷனில் மம்மூட்டியை நேர்காணுகிறார்கள்.
சினிமா எனக்குத் தொழில். என்னை ரசிக்கலாம். ஆராதிக்கக்கூடாது என்கிற மாதிரியே சென்றுகொண்டிருந்த அந்தப் செவ்வியில் – அவரை “கேரளத்தின் சூப்பர் ஸ்டாரான நீங்கள்….” என்றபடி, எதுவோ கேட்க முற்படுகிறார் நேர்காணுகிறவர்.
மம்மூட்டி சொல்கிறார் :
“நான் கேரள சினிமாவின் சூப்பர் ஸ்டார் அல்ல. மோகன்லால்தான் அங்கே சூப்பர் ஸ்டார்!”
தலிபான்கள் அதிரடி மாணவிகளுக்கு நிகாப் கட்டாயம்
ஆப்கன் தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகள் கட்டாயம் முகத்தை முழுவதுமாக மூடி அபாயா மற்றும் நிகாப் அணிய வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் வகுப்புக்கள் பால் இன ரீதியில் பிரிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் திரையினால் மறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.