இலங்கை: கொரனா செய்திகள்

தொற்றாளர் தொகையும் கடுமையாக சரிவு….

நாட்டில் மேலும் 542 பேர் இன்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.  அதன்படி, 520,175 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், 652 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 459,298 ஆக அதிகரித்துள்ளது.

ரோஹித ராஜபக்ஷ முதலமைச்சர் வேட்பாளர்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு புதல்வரான ரோஹித ராஜபக்ஷ எதிர்வரும் தேர்தலில் நேரடியாக களமிறங்கவுள்ளார். அவர், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியுள்ளார். வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராகவே அவர் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்குள் நுழையும் ஆப்கான் போதைப் பொருட்கள்

ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படும் போதைப் பொருட்கள், மும்பை உட்பட அரபிக்கடல் பகுதியில் உள்ள துறைமுகங்கள் வாயிலாக வந்து செல்லுவதுடன் நாட்டின் பல பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் சனத்தொகை பாதியாகக் குறையும் அபாயம்

அடுத்த 45 ஆண்டுகளில் சீனாவின் சனத்தொகை பாதியாகக் குறையுமென்று புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கின்றது. முந்தைய ஆய்வுகள்  சனத்தொகை வீழ்ச்சியின் வேகத்தை கடுமையாகக் குறைத்து மதிப்பிட்டிருக்கலாமென்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம்  பிறப்பு வீதம் ஒவ்வொரு பெண்ணுக்கும் 1.3 குழந்தைகளாக இருந்ததாக சனத்தொகை கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது. 

சமூக முன்னேற்றத்திற்கும் மனித குல விடுதலைக்கும் தம்மை அர்பணித்தவர்களை நினைவில் நிறுத்துவோம்.

(சாகரன்)

சமூக நீதி…. சுயமரியாதை…. பகுத்தறிவு… பெண்விடுதலை…. சாதி ஒழிப்பு… என்ற பலதையும் கையில் எடுத்த பெரியார். இன்று தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் சமூக வளர்ச்சியை நோக்கிய பணயத்திற்கு வித்திட்டவர். இவரின் போராட்டங்களை மறுத்தவர்கள் தமிழ் நாட்டில் பொதுவாழ்வில் இருக்க முடியாது என்றளவிற்கு தனது போராட்ங்களுக்கான நியாதிக்கங்களை நிறுவிச் சென்றவர் அவரின் பிறந்த மாதத்தை நாம் கடந்து வந்துள்ளோம்… அது செப்ரெம்பர் மாதம்.

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் பகுதி – 11

(அ.வரதராஜா பெருமாள்)

இலங்கை தற்போது எதிர்நோக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடி, நாட்டில் பொருட்களின் விலையேற்றம் மற்றும் அடிப்படையான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் போன்றவற்றிற்கு, வெளிநாடுகளுடனான இலங்கையின் ஏற்றுமதி – இறக்குமதி மற்றும் பொருளாதார உறவுகளின் பண்புகளே பிரதான காரணமென பொதுவாக கூற முடியும். உலகில் எந்த நாடும் ஏனைய நாடுகளுடன் பொருளாதார உறவுகளின்றி மூடப்பட்ட பொருளாதாரமாக இருக்க முடியாது. அவ்வாறு எக்காலத்தும் இருந்ததில்லை. ஆனால் வெளிநாடுகளுடனான பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது கவனத்துக்கு – பரிசீலனைக்கு உரிய பிரதானமான விடயங்களாகும்.