’யாழ். வைத்தியசாலையில் நினைவுத்தூபி அமைக்கப்படும்’

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக, விரைவில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்படும் என, யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள உயர்தர பாடசாலை மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள், இன்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

சீனாவில் வலுப்பெரும் ’Worker Lives Matter’

சீனாவில் பல நிறுவனங்கள் கடைப்பிடித்து வரும், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையான வேலை நேரத்தை எதிர்த்து ”workers lives matters” என்னும் பிரச்சாரத்தை ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.

மாடுகளையும் புண்ணாக்கிய விலையுயர்வு

அரசாங்கத்தினால் எடுக்கப்படும் ஒவ்வொரு தீர்மானங்களும் “மரமேறி விழுந்தவனை மா​டேறி மித்த” கதையாகத்தான் இருக்கிறது. இறுதியில் எங்கே போய் நிற்கப்​போகிறது என்பது தெரியாமலே இருக்கிறது. அடுத்த வேளைக்கு என்ன செய்வோமென நினைப்போரின் மனங்களில் கொதித்த எண்​ணெயை வார்த்தால் போல விலைவாசி அதிகரிப்புகள் ஒவ்வொரு நாளும் எகிறிக் கொண்டே போகின்றன.

காணாமல்போன இந்திய மீனவர் சடலமாக மீட்பு

நேற்று  (19), கடற்படையினரின் படகு மோதி கடலில் மூழ்கி காணாமல் போன மீனவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மீனவரின் சடலம், காரைநகர் – கோவளம் கடலில்  இருந்து, இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

கணிசமான குறைந்தது தொற்றாளர் தொகை. நாட்டில் மேலும் 442 பேர் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.  அதன்படி, 533,208 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், இன்றையதினம் 360 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை  493,674 ஆக அதிகரித்துள்ளது.

குஷிநகர் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்தார்

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இங்கு, இலங்கையில் இருந்து பௌத்த துறவிகளுடன் வந்த விமானம் முதலாவதாக தரையிறங்கியது.

4 வருடங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்ட இடுக்கி அணை

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணையில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

இலங்கை: கொரனா செய்திகள்

தொடர்ந்து சரிகிறது தொற்றாளர் எண்ணிக்கை. நாட்டில் மேலும் 461 பேர் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, 532679 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், இன்றையதினம் 339 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை  493,314 ஆக அதிகரித்துள்ளது.

யாரும்
தீவு தான்

(Manikkavasagar Vaitialingam)

இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகளே ஆகும். “சப்த” என்னும் சொல் சமசுக்கிருத மொழியில் ஏழு என்னும் பொருளைக் கொண்டது. எனவே ஏழு தீவுகளுக்கு இப்பெயர் வழங்கிவருகின்றது.
ஆனால் ஏழாக இருந்து பின்னர் பல தனித் தீவுகளாகப் பிரிந்து பல தீவுகள் காணப்படுகின்றன.1974 இல் கச்சதீவும் சேர்ந்து விட்டது.