இந்திய கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டை புரிந்துகொள்வதாகத் தெரிவித்த பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி, இது தொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்த உள்ளதாகவும் கூறினார்.
Month: October 2021
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் பிரபல நாடு
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து போலாந்து விலகுவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து போலந்து வெளியேறினால் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும் எனத் தெரிவித்து அரசுக்கெதிராக லட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடக்கு நோக்கி வந்த சொந்தச் சகோதரர் (நீதி மறுப்பும் நீதி கோரலும்)— 11.
(கருணாகரன்)
(இனவன்முறையினால் வடக்கு நோக்கி வந்த மலையக மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் நம்பி வந்த தமிழ்ப் பிரதேசங்களிலேயே (வடக்கிலேயே) புறக்கணிக்கப்படுகிறார்கள். பல வழிகளிலும் ஒடுக்கப்படுகிறார்கள். அரச நிர்வாகம் தொடக்கம் வளப்பகிர்வு, சமூக நிலை எனப் பல வகையிலும் இந்த அநீதி தொடர்கிறது. இந்த மக்களுடைய பிரச்சினைகளைக் குறித்து இதுவரையிலும் கவனத்திற்குரிய மைய உரையாடல்களோ ஆய்வுகளோ நடக்கவில்லை. இந்தக் கட்டுரைத் தொடர் அதனைப் பொதுவெளியில் திறக்க முற்படுகிறது. — ஆசிரியர்)
இறுதி அஞ்சலிக்காக லக்னோ சென்றார் பிரியங்கா
உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாரதிய ஜனதா கட்சியினர் சென்ற கார் மோதியது. இதில், விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தனது பதவியை இராஜிமானா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே அஜய் மிஸ்ராவை மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று மௌன விரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த சூழலில் பலியான 4 விவசாயிகளுக்கு வன்முறை நடந்த இடத்திற்கு அருகில் திகோனியா கிராமத்தில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை லக்னோ வந்தடைந்தார் பிரியங்கா காந்தி .
கல்வியில் வீழ்ச்சியுறும் வடக்கு, கிழக்கு: பரிகாரம் என்ன?
மஹாபொல நிதியத்துக்கு புதிய பெயர் மாற்றம்
மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் பெயர், லலித் அதுலத்முதலி உயர்கல்வி உதவித் தொகை நம்பிக்கை நிதியம் என்று மாற்றப்படும் என நிதியத்தின் தற்போதைய தலைவரும் வர்த்தக அமைச்சருமான டொக்டர் பந்துல குணவர்தன, இன்று (12) தெரிவித்தார். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த, பல்கலைக்கழக கல்வி வாய்ப்பைப் பெறும் மாணவர்களுக்கு தனது சொந்தப் பணத்தில் நிதியத்தைத் தொடங்கிய மறைந்த வர்த்தக அமைச்சர் லலித் அதுலத்முதலிக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே இந்த பெயர் மாற்றம் இடம்பெறுவுள்ளதாகத் தெரிவித்தார்.
’இந்திய இழுவைப் படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம்’
இந்திய விவசாயிகள் போராட்டம்
மிகச் சிறந்த தோழரை இழந்து விட்டோம். சிரம் தாழ்த்தி செவ்வஞ்சலிகள்
தோழர் என வாஞ்சயுடன் என்னை அழைக்கும் தோழர் மோகன் சுப்பிரமணியம் நேற்று ( 07- 10-21) மௌனித்து விட்டார். தோட்டத் தொழிலாளியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்த தோழர் மோகன் 1975 இல் செங்கொடி சங்கத்தில் உறுப்பினராக இணைந்தவுடன் தொழிலாளர் வர்க்க சிந்த பனையில் ஈடுபாடு கொண்டு மறைந்த தோழர் ஓ.ஏ.இராமையாவின் உற்ற தோழனாக செயற்பட ஆரம்பித்தார்.