மாகாண சபைத் தேர்தல்களுக்கு கால தாமதம் ஏற்படுத்தக் கூடாது. அது ஜனநாயக செயற்பாடுகளில் அடிப்படையை மீறுவதாகும் என முன்னாள் மத்திய மாகாண சபைத் தலைவர், துரை மதியுக ராஜா தெரிவித்தார். இன்று (19) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Month: October 2021
துறைமுக நகருக்கு மக்கள் செல்லலாம்
கொழும்பு துறைமுக நகரம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பரந்த கடல் பகுதியை நிரப்ப கட்டப்பட்டது கொழும்பு துறைமுக நகரம் 269 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. சீன துறைமுக பொறியியல் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், முதல் கட்ட கட்டுமானத்தின் 99 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும் துறைமுக நகர இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை: கொரனா செய்திகள்
இத்தாலியில் வலுக்கும் போராட்டம்
ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் இலக்குவைத்துப் படுகொலை
பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களை இலக்குவைத்து படுகொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த சமீபத்திய நிகழ்வில் அவர்கள் ஒரு பள்ளியில் இரண்டு சிறுபான்மை வகுப்பு ஆசிரியர்களை படுகொலை செய்துள்ளனர்.