உணவுப் பிரச்சினையை தீர்க்க நிதானம் தேவை

(கருணாகரன்)

அடுத்த ஆண்டில் இலங்கையில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறப்படுகிறது. காரணம், உணவுப் பொருட்களின் இறக்குமதி குறைந்ததன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அரிசி, சர்க்கரை, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், விரைவில் இலங்கை மிகவும் மோசமான உணவுப் பஞ்சத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். 

மாதகல்லில் பதற்றம்

மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு – 150 , பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறவுள்ளது.    அந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அரசியல்வாதிகள் , அப்பகுதி மக்கள் என பலரும் குறித்த காணிக்கு முன்பாக கூடிய வேளை , கொட்டான்களுடன் கடற்படையினர் அவர்களை சூழ்ந்து கொண்டு , அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.    அச்சுறுத்தல்களை மீறியும் அப்பகுதியில் மக்கள் கூடி தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

புதுடெல்லியை சென்றடைந்தார் பெசில்

இலங்கையின் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதுடெல்லியை சென்றடைந்துள்ளார். அவரை, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட வரவேற்றார்.

சீனாவிடம் பெற்ற கடனால் விமான நிலையத்தை இழக்கும் அபாயம்

சீனாவிடம் வாங்கிய கடனுக்காக உகாண்டா அரசு தனது  சர்வதேச விமான நிலையத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

யாழில் பாண் 85 ரூபாய்

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாணின் விலை 10 ரூபாவினால் அதிகரித்து 85 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு, ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்வதில்லையென   தீர்மானிக்கப்பட்டது.

ஜப்பான் அதிரடி: எல்லைகளை மூடியது

ஜப்பான் தனது எல்லைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் தாக்கத்தை அடுத்தே எல்லைகளை மூடுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு வர்த்தகர்கள், மாணவர்களுக்கான விஸாக்களுக்கு ஜப்பான் அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளது. தமது நாட்டு பிரஜைகளை காப்பாற்றும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் முழு ஊரடங்கு?

அதிகரிக்கும் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக  ஜேர்மனியில் மீண்டும் முழு ஊரடங்கு அமுல் படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

தொற்றாளர் தொகையில் பாரிய அதிகரிப்பு. நாட்டில் மேலும் 541 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 563,061 ஆக அதிகரித்துள்ளது.

முதலாளித்துவத்தின் நெருக்கடியும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

35-1. 2008 செப்டம்பரில் அமெரிக்க முதலீட்டு வங்கியான லெஹ்மென் பிரதர்சின் பொறிவுடன் வெடித்த உலகப் பொருளாதார நெருக்கடியானது ஒரு காலகட்டத்திற்குரிய பொருளாதாரச் வீழ்ச்சி அல்ல, மாறாக முதலாளித்துவ ஒழுங்கின் அடிப்படையான நிலைமுறிவாகும். நிதிய முறைமைக்கும் பிரதான கூட்டுத்தாபனங்களுக்கும் முண்டு கொடுப்பதற்கு, அரசாங்கங்களால் உட்செலுத்தப்பட்ட டிரில்லியன் கணக்கான டொலர்கள் பொருளாதார அமைப்பினை மறுஸ்திரம் செய்து விட்டிருந்ததாகத் தோன்றிய நம்பிக்கைகள் எல்லாம் துரிதமாக மறைந்துவிட்டன. இந்த பிணையெடுப்புகளும் ஊக்குவிப்புப் பொதிகளும், உண்மையில் தனியார் சுரண்டல்காரர்கள் மற்றும் ஊக வணிகர்களின் மலை போன்று குவிந்திருந்த திரும்பிச் செலுத்தமுடியாத கடனை, அரசாங்கக் கணக்கிற்கு மாற்றி விட்டு, இப்போது ஒவ்வொரு நாட்டிலும் சிக்கன நடவடிக்கைகளின் வடிவத்தில் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி இன்னும் விரிந்து சென்று, பெரும் ஆபத்தான வடிவங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலரான நிக் பீம்ஸ் விளக்கியதாவது: “நிலைமுறிவு என்றால் முதலாளித்துவம் தீடீரென இயங்காது நின்று போய் விடுகிறது என்று அர்த்தமல்ல. இது வரலாற்றின் ஒரு புதிய காலகட்டம் திறப்பதை அடையாளப்படுத்துகிறது, இதில் பழைய கட்டமைப்புகளான பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புகளும் மற்றும் அத்துடன் சித்தாந்தங்கள் மற்றும் சிந்திக்கும் வழிவகைகளும் சமுதாயத்தின் தலைவிதியை தானே முடிவெடுக்கும் புதிய வகையிலான அரசியல் போராட்டம் அபிவிருத்தியடைவதற்கு பாதையை திறந்து விடுகின்றன.”[71]