76 ஆவது பட்ஜெட் இன்று சமர்ப்பிப்பு

2022ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது வாசிப்புக்காக   நிதி அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷவால், இன்றுபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

பண்ணைத் தொழில்: பலபடிகள் மேல்…

(பாலகிருஸ்ணன் சிவரஞ்சன்)

“படிக்காமல் மாடு மேய்க்கப் போறியே” என, பாடசாலை நாள்களில், எங்களை ஆசிரியர்களும் பெற்றோரும் உற்றாரும் அவ்வப்போது அன்பாகவும் இறுக்கமாகவும் கண்டித்த சம்பவங்கள், எங்கள் எல்லோருக்கும் நிறையவே உள்ளன.

‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ செயலணியில் மூன்று தமிழர்கள் சேர்ப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணியில் மூன்று தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானாந்தராஜா ஆகியோரே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை: மழை நிலவரம்

கேகாலை, குருநாகல் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம், மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பதுளை, கம்பஹா, கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தளை,  களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

பெலாரஸ் எல்லையில் அகதிகளை முடக்கிய போலந்து

பெலாரஸுடனான போலந்தின் கிழக்கு எல்லையில் போலந்துக்குள் நுழைய முயன்ற அகதிகளின் முயற்சிகளை முறியடித்துள்ளதாக போலந்து தெரிவித்துள்ளது.

பெரியண்ணை தோழர்

பெரியண்ணை என தோழர்களால் அழைக்கப்படும் அரியகுட்டி ஜோன் காலமாகிவிட்டார் என்ற துயரச் செய்தியை தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். மானிப்பாய் நவாலியை சேர்ந்த அவர் வவுனியாவில் வசித்து வந்தார். அன்னாரது நல்லடக்கம் நாளை (10.11.2021) வவுனியாவில் பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறும் என குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாளாந்தம் கூடுகிறது கொரோனா தொற்று. நாட்டில் மேலும் 538  பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 546,473 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை

சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், சென்னை நகரின் எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட முக்கிய இடங்கள் வெள்ளத்தில்  மிதக்கின்றன. பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. சில பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்களுடன் சென்று பார்வையிட்டார்.

தமிழ்க் கட்சிகளின் யாழ். சந்திப்பு: தமிழர்களை 13க்குள் சுருக்கும் முயற்சியா?

(புருஜோத்தமன் தங்கமயில்)

அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் சந்திப்பொன்று, தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (02), யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.