வைரஸ்களின் பரிணாம சுழற்சியில் உருமாற்றங்கள் உருவாவது இயற்கையானது. எனவே புதிதாக உருவாகியுள்ள இந்த ஓமைக்ரான் உருமாற்றத்திற்கு பீதி தேவையில்லை. அதில் பல மனித இனத்திற்கு பாதகமின்றியும் சாதகமாகவும் சில நமக்கு பாதகமுண்டாகும் வகையில் இருக்கும். இதுவும் இயற்கையானது.
Month: November 2021
வரலாற்று நாயகன் பிடல் காஸ்ட்ரோ
(பெரணமல்லூர் சேகரன்)
கியூப புரட்சியாளர் பிடல் காஸ்ட் ரோ 1926 ஆகஸ்ட் 13இல் பிறந்தார். தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ ஸ்பெயின் நாட்டவர். தாயார் லினா கியூபாவைச் சேர்ந்தவர். வசதியான விவசாய குடும்பத்தில் பிறந்த பிடல் காஸ்ட்ரோ ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் சமூக அறிவியல் பட்டப் படிப்பு படித்தபோது அவருடைய சிந்தனை அமெரிக்காவுக்கு எதிராக திரும்பியது. அமெரிக்காவின் கைப்பா வையாக செயல்பட்ட சர்வாதிகாரி பாடிஸ்டாவின் ஆட்சிக்கு எதிராக புரட்சியாளராக மாறினார். 1953-ஆம் ஆண்டு இளைஞர்க ளைத் திரட்டி கிழக்கு நகரான சாண்டி யாகோவில் அரசுக்கு எதிராகப் போரா டினார். இதில் அவருக்குத் தோல்வியே கிடைத்தது. இதனால் பிடல் காஸ்ட்ரோ வும் அவருடைய தம்பி ரவுல் காஸ்ட்ரோவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
உணவு விழிப்புணர்வு: மைதாவும் நாமும்
நவம்பர் 27… கியூபா
இந்த நவம்பர் 27ஆம் தேதி 8 அப்பாவி இளைஞர்கள் கொல்லப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. இன்று, கியூபா மக்கள் பல்வேறு பகுதிகளயும் சேர்ந்த நண்பர்கள் இணைந்த மாபெரும் அணிவகுப்பில் அவர்களை நினைவு கூர்ந்தனர்.
நவம்பர் 27, 1871: எட்டு மருத்துவ மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர் நவம்பர் 24 அன்று, அவர்களின் உடற்கூறியல் பேராசிரியர் வகுப்புக்கு தாமதமாக வருவதைக் கண்டு, எட்டு மாணவர்களும் அருகிலுள்ள எஸ்படா கல்லறைக்குச் செல்ல முடிவு செய்தனர். அங்கு, அவர்கள் அதன் தெருக்களில் நடந்து, அலுவலகங்களுக்கு முன்னால் ஒரு பூவைப் பறித்து, வண்டியில் சவாரி செய்தனர், அதில் அவர்கள் உடற்கூறியல் வகுப்பிற்கு சடலங்களை எடுத்துச் சென்றனர் – 16 முதல் 21 வயது வரையிலான இந்த சிறுவர்களின் அப்பாவி குறும்புகள். பணியில் இருந்த ஸ்பெயின் காவலர் கோபமடைந்தார். அன்றைய தினம் ஸ்பெயின் பத்திரிகையாளர் Gonzalo Castañón ன் கல்லறையில் சிறுவர்கள் கண்ணாடியைக் கீறிவிட்டார்கள் என்று பொய்யான கண்டனம் தெரிவிக்க முடிவு செய்தார்.
அவர்களும் மற்ற வகுப்பினரும் (பிந்தையவர்கள் கல்லறைக்கு அருகில் கூட இல்லை என்றாலும்) கைது செய்யப்பட்டு செயலாக்கப்பட்டனர். மூன்று நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 27 அன்று, மதியம் 1:00 மணிக்கு, கவுன்சில் கையொப்பமிட்டது, அதில் இறக்க வேண்டிய மாணவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டன, மேலும் மாலை 4:00 மணியளவில், அவர்கள் தேவாலயத்திற்குள் ஒவ்வொருவரும் ஒரு சிலுவையை வைத்திருந்தனர்.
கட்டப்பட்ட கைகள். அவர்கள் மரணதண்டனை நிறைவேற்றப்படும் லா பூண்டாவில் உள்ள எஸ்பிளனேடுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் முழங்காலில் மற்றும் அவர்களின் மரணதண்டனை அவர்களின் முதுகில், அப்பாவி மாணவர்கள் துப்பாக்கி சூடு மூலம் ஜோடியாக தூக்கிலிடப்பட்டனர். காயத்திற்கு அவமானம் சேர்க்க, உடல்கள் நகர சுவர்களுக்கு வெளியே ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஒரு பொதுவான கல்லறையில் வீசப்பட்டன. அவர்களது குடும்பங்கள் இறந்தவர்களைக் கோருவதற்கும் அவர்களுக்கு ஒரு கிறிஸ்தவ அடக்கம் செய்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை, மேலும் அவர்களின் இறப்புச் சான்றிதழ்கள் எந்த தேவாலயத்திலும் பதிவு செய்யப்படவில்லை.
அவர்களது வகுப்பின் மற்ற மாணவர்களும் நியாயமற்ற தண்டனைகளைப் பெற்றனர்: 11 பேருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 20 முதல் நான்கு ஆண்டுகள் மற்றும் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் அவர்களின் உடைமைகள் அனைத்தும் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட சிவில் பொறுப்புக்கு உட்பட்டவை.
பத்து வருட சுதந்திரப் போர் தொடங்கி மூன்றாண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வு, அந்த ஆண்டுகளில் கிளர்ச்சியாளர்கள் பெற்ற பலத்தை எதிர்கொள்ள ஸ்பெயினுக்கு ஒரு முன்மாதிரியான பாடமாக இருந்தது. ஸ்பானிய மகுடம் தனது அதிகாரத்தைத் தக்கவைக்க எவ்வளவு தூரம் செல்ல அமைப்பு தயாராக உள்ளது என்பதை தெளிவுபடுத்த விரும்பியது. குற்றம் மற்றும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் இரண்டும் கியூபா மக்களிடையே சுதந்திர உணர்வை வலுப்படுத்த உதவியது.
இதனால்தான் ஒவ்வொரு ஆண்டும், மருத்துவ மாணவர்களும், இளைஞர்களும் பொதுவாக ஹவானா பல்கலைக்கழகத்தின் படிக்கட்டுகளில் ஒன்றுகூடி, 1871 ஆம் ஆண்டு எட்டு மருத்துவ மாணவர்கள் தூக்கிலிடப்பட்ட சுவரைச் சுற்றியிருந்து பின்னர் நினைவிடத்திற்கு அணிவகுத்து செல்கின்றனர்.
(Sinna Siva)
மீயுயர் சபையிலும் வரம்பு மீறும் வாய்மொழி துஷ்பிரயோகம்
(மகேஸ்வரி விஜயனந்தன்)
வீடுகள், தொழில் நிலையங்கள், போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவது சாதாரணமாகிவிட்டது என்பதை விட அனைவருக்கும் பழகிய ஒன்றாகவும் போய்விட்டது.
ஆனால் ஒரு நாட்டின் மீயுயர் சபை அதிலும் பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை இயற்றும் இடத்தில், பெண் உறுப்பினர்கள் வாய்மொழி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமைமைய எவ்வகையிலும் எவரும் அனுமதிக்க முடியாது.
பெண்களைப் பாதுகாக்க பல்வேறு சட்டதிட்டங்களை இயற்றும் மீயுயர் சபையிலேயே இந்த நிலை என்றால், ஏனைய இடங்களில் பெண்கள் எவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ளலாம். துஷ்பிரயோகம் என்பது உடல் உள ரீதியானது மாத்திரமல்ல. வாய்மொழி ரீதியான துஷ்பிரயோகமும் இதில் பிரதானமாக உள்ளடங்குகின்றது.
அதாவது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக நடைபெற்று வரும் வாத விவாதங்களில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையிலேயே,எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி தொடர்பில், பட்டும் படாமலும் புரிந்தும் புரியாமலும் சில இரட்டை அர்த்தம் கொண்ட கருத்துக்களை ஆளுங்கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி சபையில் முன்வைத்தார்.
இவரது உரையின் போது, இவர் உரையாற்றிய தொனி, கூறிய கதை, சுட்டிகாட்டிய உதாரணங்கள் என்பவற்றுக்கு மெய்மறந்து ஆளும்கட்சியினர் மேஜை மீது தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதால் வந்த ஆர்வக்கோளாறே இவரை அன்றைய தினம் அதிகம் அதிகம் பேசத் தூண்டியது. இதனால் தான் தமது வாயிலிருந்து எவ்வாறான வார்த்தைகள் வெளிவர வேண்டும் என்பதை இவர் மறந்து விட்டார்.
எனினும் இவரது உரை பெண்களை அவமதிக்கும் வகையில் உள்ளதாகத் தெரிவித்து, திஸ்ஸ குட்டியாராச்சி உரையாற்றி முடித்ததுமே, எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தமது எதிர்ப்பை முன்வைத்தார்.
ஆனால் அப்போது சபைக்கு தலைமைத் தாங்கிய ஆளுங்கட்சியின் உறுப்பினரான அஜித் ராஜபக்ஸ, திஸ்ஸ குட்டியாராச்சியின் உரையில் தவறு இருப்பது போன்று தனக்கு தெரியவில்லை. இருந்தால் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லுங்கள் என்றார்.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவர், இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளேயிடம் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன முறைப்பாடு ஒன்றை செய்தார்.
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே சபாநாயகரின் கவனத்துக்கு கடிதம் மூலம் கொண்டு வந்தார்.
“சட்டத்தை உருவாக்கும் இடமொன்றில் அதற்கு பங்களிக்கும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் பெண்கள் அந்த இடத்திலேயே வாய்மொழி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிறார் எனின், இதன்மூலம் ஒட்டுமொத்த சமூகத்தின் சீரழிவும் புலப்படும்“.
அதேவேளை, பொது இடங்களில் பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி, அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் உயரிய நிறுவனம் ஒன்றில் பெண் உறுப்பினர் ஒருவருக்கு எதிரான, வாய்மொழி துஸ்பிரயோகம் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே சபாநாயகரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது.
அத்துடன், அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைவான மட்டத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 12 பெண் உறுப்பினர்களின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்தாடல்கள் இடம்பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து திஸ்ஸகுட்டியாராச்சி எம்.பியின் உரை தொடர்பில் தான் கவலையடைவதாகவும் அதியுயர் சபையில் பெண்களை அவமதிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என சபாநாயகர் கடுமையாக எச்சரித்தார்.
“இதுபோன்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாதிருப்பதை உறுதி செய்ய ஆளும், எதிர்க்கட்சி பிரதமக் கொறடாக்கள் இது தொடர்பில் இருதரப்பு எம்.பிகளுக்கும் அறியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்”.
பெண்களை அவமதிக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து இடம்பெற்றால், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் எனவும் எச்சரித்தார்.
ஆனால் அதன் போது கூட திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி தனது கருத்தில் எவ்வித தவறுகளும் இல்லை. தான் சரியான கருத்துகளையே முன்வைத்தேன். அதை கேட்பவர்கள் தவறான முறையில் கேட்டால், அதற்கு தான் பொறுப்பில்லை என எகத்தாளமாக பதிலளித்தார்.
இந்த நிலையில், பாராளுமன்றத்துக்குள்ளேயே எதிர்கட்சியினரால் திஸ்ஸ குட்டியராச்சி மீது தாக்குதல் நடத்த முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டதுடன், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமான 25ஆம் திகதி “பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து“என்ற ஸ்டிக்கர் அணிந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எதிர்ப்பினை வெளிகாட்டியிருந்தனர்.
அத்துடன், பாராளுமன்றத்தில் மோசமாக செயற்பட்டுகொண்டிருக்கும் ஆளுங்கட்சி எம்.பி திஸ்ஸ குட்டியாராச்சியின் மனநலம் தொடர்பில் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல சபையில் கோரிக்கை விடுத்ததுடன், திஸ்ஸ குட்டியாராச்சிக்கு சபாநாயகர் தண்டனை வழங்கவில்லை என்றால், இந்த விடயத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்வோம் எனவும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷமன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தாலும் ஆளுங்கட்சியிருந்து எவரும் இது குறித்து, வாய் திறக்கவில்லை என்பது ஆச்சிரியத்தை வரவழைக்கவில்லை.
மேலும் ஒருவர் எந்த நிலையில் இருந்தாலும் அவரது வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் அவரது புத்திசாலித்தனம் மற்றும் கல்வித்தரம் எவ்வாறு என்பதை திஸ்ஸ குட்டியாராச்சி மேலும் பாராளுமன்றத்தில் உறுதிபடுத்தியுள்ளதாக கபே அமைப்பும் சுட்டிக்காட்டியுள்ளது.
உண்மையில் உலகின் முதலாவது பெண் பிரதமரையும் நிறைவேற்று அதிகாரமுடைய பெண் ஜனாதிபதி, பெண் நீதியரசர் உள்ளிட்டோரை உருவாக்கிய எமது நாட்டின் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது ஆண்களை விட 60 சதவீதம் குறைவாதகவுள்ளது. உண்மையில் பெண்களுக்கு அரசியலில் பங்களிப்பு செய்வதற்கு ஆசை இருந்தாலும் இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு பயந்தே தமது அரசியல் ஆசைகளை அடியோடு மறந்து விடுகின்றனர்.
“ பெண்களுக்கு எதிரான வன்முறையை இப்போதே ஒழிக்கவும்” எனும் தொனிப்பொருளில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டாலும் வருடங்தோறும் உலகளாவிய ரீதியில் மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்நாளில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவதுடன், தற்போதைய கொரானா தொற்று உள்ளிட்ட இன்னோரன்ன காரணங்களால் ஏதோ ஒருவகையில் பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
உலகலாவிய ரீதியிலான கொரோனா முடக்கத்துக்குப் பின்னர், 13 நாடுகளை அடிப்படையாக வைத்து, ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த ஆராய்ச்சிக்கு அமைய ஒவ்வொரு மூன்று பெண்களில் இருவர் சில வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாகவும் குறிப்பாக தினமும் 137 பெண்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படுவதாகவும் ஐ.நாவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இவ்வாறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் 10 பெண்களில் ஒருவர் மாத்திரமே பொலிஸ் அல்லது வேறு துறையினரை நாடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, சர்வதே மகளிர் தினம், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் தினம் என எத்தனை தினங்களை அனுஷ்டித்தாலும் அனைத்து வகையான பெண்களும் துஷ்பிரயோகம் மற்றும் நிர்ப்பந்தம் இல்லாத வாழ்க்கையை அனுபவிப்பதை உறுதி செய்ய ஒவ்வொரு நாட்டிலும் முயற்சி செய்யும் போதே, இவ்வாறு அனுஷ்டிக்கப்படும் தினங்களின் பலனை பெண்கள் அடையமுடியும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
திரும்பி வந்தார் திலகர்
‘அப்பாவிகள் கைதாவதை ஏற்க முடியாது’
குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உண்மையை மறைத்து அப்பாவிகளைக் கைது செய்வதாக இருக்கக்கூடாது எனத் தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப், அனுமதி கொடுத்ததற்காக நகர பிதா நளீமையையோ படகு ஓட்டுநரையோ கைது செய்ய முடியாது என்றார்.
16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கை: கொரனா செய்திகள்
விஜேவீரவின் இறுதிக் கணங்கள் –
(என்.சரவணன்)
இம் மாதம் நவம்பர் 13ஆம் திகதியன்று ஜே.வி.பி, மாவீரர் தினத்தை நினைவு கூரியது. இன்று இலங்கையில் சக்தி வாய்ந்த இடதுசாரி இயக்கமாக முதன்மை நிலையில் இருப்பது ஜே.வி.பி.யே. 1971, 1988 ஆகிய இருமுறையும் புரட்சி செய்யவெனப் புறப்பட்டு தோல்வி கண்டு, மீண்டும் புறப்பட்டுள்ள ஜே.வி.பி.யானது இன்றும், இடதுசாரி இயக்கங்களிலேயே பெருமளவு உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். நிறுவனக் கட்டமைப்பு, ஒழுங்கு விதிகள், போன்ற இறுக்கமான ஒழுங்குக்குட்பட்டு இயங்கி வரும் ஜே.வி.பி, இன்றும் அதிகாரத் தரப்பினருக்கு பெரும் தலையிடியைக் கொடுத்து வரும் இயக்கமாகவும் எதற்கும் விலை போகாத கட்சியாகவும் இருந்து வருகிறது என்றால் மிகையில்லை. 1989ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி அதன் ஸ்தாபகரும் தலைவருமான றோகண விஜேவீர, ஆளும் அதிகார வெறியர்களால் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, இறுதியில் ரகசியமாக சுடப்பட்டு, எரிக்கப்பட்டார். அத்தினத்தை வருடா வருடம் ஜே.வி.யினர் கொல்லப்பட்ட தங்களது தோழர்களின் நினைவாக அனுஷ்டித்து வருகின்றனர்.
முழுமையாக கட்டுரையை வாசிக்க….