இக்கட்டுரைத் தொடரின் கடந்த சில பகுதிகளில் இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பில் சில முக்கியமான துறை சார் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் எவ்வாறான பலயீனமான நிலைமைகள் உள்ளன என்பதனை அவதானித்தோம். இப்போது நாட்டில் அரசாங்கத்தின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மிகப் பிரதானமான பேசு பொருளாக இருக்கின்றது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்துவதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் நெறிப்படுத்துவதிலும் அந்நாட்டு அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் ஒரு பிரதானமான இடத்தை வகிக்கின்றமையானது அனைவரும் அறிந்த விடயமே.
திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப்பாதை விபத்துக்கு உள்ளானமை தொடர்பில் அந்தப் படகுப்பாதையின் உரிமையாளர் மற்றும் அதனை இயக்கிய இருவரென மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில், சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அனர்த்தம் நேற்று(23) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல், வீடுகளுக்குள்ளே முடங்கிய மாணவர்கள், பட்டாம் பூச்சிகள் இரண்டு சிறகுகளையும் அடித்துக்கொண்டு, எவ்வளவு சுதந்திரமாகப் பறந்துதிரியுமோ, அதேபோன்றுதான், புன்முறுவலுடன் பாடசாலைகளுக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர்.
நாளாந்தம் உயர்கிறது கொரோனா தொற்று. நாட்டில் மேலும் 518 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 559,378 ஆக அதிகரித்துள்ளது.
அக்கரப்பத்தனை பெருந்தோட்டத்துக்குட்பட்ட அல்பியன் தோட்டத்தைச் சேர்ந்த ஆட்லோ, பிரஸ்டன், சின்னநாகவத்தை, நியுபிரஸ்டன் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (23) தொழிலுக்குச் செல்லாமல் தொழில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சின்ன நாகவத்தை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் அறுவர் மரணமடைந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றமான நிலைமையொன்று தோன்றியுள்ளது. கிண்ணியா பிரதேச செயலகத்தை மக்கள் முற்றுகையிட்டு அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன்னெடுக்கின்றனர். உயிரிழந்த சிறார்களின் சடலங்கள், பிரேத பரிசோதனைகளுக்காக கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.