சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்தின் நீண்ட தூர ரயில் சேவைகள், நாளை (16) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
Month: November 2021
இலங்கை: கொரனா செய்திகள்
நாட்டில் மேலும் 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 697 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 551,342 ஆக அதிகரித்துள்ளது.
சின்மயா வித்யாலயா – RSS பின்புலம்.!
சங்கரன் சின்மயா வித்யாலயா என்று அழைக்கப் படும் இந்தப் பள்ளி ஆனது மும்பை மத்திய சின்மயா மிஷன் அறக்கட்டளையின் கீழ் இயங்குகிறது. இது ஒரு சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்ட பள்ளியாகும். இந்த சின்மயா மிஷன் அறக்கட்டளை இந்தியா, வெளிநாடு என 300க்கும் மேற்பட்ட மையங்களை செயல்படுத்தி வருகிறது. மும்பையில் இதன் தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு உலகம் முழுவதும் உள்ள கிளைகளை நிர்வாகம் செய்வதற்கு என்று ஆறு நிர்வாகப் பிரிவுகள் உள்ளன.
எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் – பகுதி – 17
(அ. வரதராஜா பெருமாள்)
இலங்கையினுடைய விவசாய உற்பத்தித்திறன் பற்றியும், இலங்கை மக்கள் எந்த அளவுக்கு அடிப்படையான உணவு வகைகளை நுகர்கிறார்கள் என்பது பற்றியும் இக்கட்டுரைத் தொடரின் கடந்த பகுதியில் பார்த்தோம். இலங்கையானது விவசாயத்துக்கான வளங்களைப் போதிய அளவு கொண்டிருந்தும் இலங்கை மக்களுக்கான அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் கணிசமான பங்கை இறக்குமதி செய்கின்ற அவல நிலையிலேயே இருக்கின்றது என்பதனையும் முன்னர் அவதானித்தோம்.
ஈழத் தமிழர்களின் குடிசனப் பரம்பலை எவ்வாறு சீராக்கலாம்..?
(சாகரன்)
இலங்கையில் ஈழத் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கில் சனத் தொகைப் பரம்பல் தொடர்ச்சியாக வீழ்சியடைந்து வருவது யாவரும் அறிந்ததே . அதிலும் வடபகுதியில் சிறப்பாக யாழ்ப்பாணக் குடா நாட்டில் சீரான குடிசனப் பரம்பல் ஏற்பட்டு இருந்தால் இன்று 12 இலட்சம் வரையிலான மக்கள் தொகை இருக்க வேண்டிய சூழலில் அதன் பாதியாகவே தற்போது சனத் தொகை இருப்பதும ஆரோக்கியமான நிலமை அல்ல.
காலநிலை நெருக்கடி: சிறுவெள்ளமும் பெருங்கேள்விகளும்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இன்னொரு மாரி காலம், இன்னுமொரு வெள்ளம், நிலச்சரிவு, உயிரிழப்புகள், இடப்பெயர்வுகள், அனர்த்தம், ஆபத்து என்ற கொடுஞ்சுழல், இன்னொரு முறை இலங்கையை தாக்கியுள்ளது. இது கடைசிமுறையல்ல என்பதை மட்டும், உறுதியாக நம்பவியலும். வருடாந்தம் எம்மை அலைக்கழிக்கும் இப்பெருமழையும் கொடுவெள்ளமும், பல கேள்விகளை எழுப்புகின்றன.