கொலைகள் கொண்டாடத்திற்குரியவை அல்ல

(தோழர் சாகரன்)

சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் ஒரு இலங்கையர் சிங்கள சமூகத்தை சேர்ந்தவர் தீ கொழுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த கொலை நடைபெற்ற விதம் எம்மைப் போன்ற பலருக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆரியகுளமும் தமிழ்த் தேசிய அரசியலும்

(என்.கே. அஷோக்பரன்)

யாழ்ப்பாண நகரிலுள்ள ஆரியகுளம், துப்புரவு செய்யப்பட்டு, அழகாகக்கப்பட்டு, ஒரு மகிழ்வூட்டும் திடலாக உருப்பெற்றிருக்கிறது. இதனை யாழ்ப்பாண மாநகர சபை செய்திருக்கிறது. அதுவும், தனியார் அறக்கட்டளையொன்றின் நிதி உதவியுடன் இது நடந்தேறி இருப்பதாக அறியக்கிடைக்கிறது.

சிலியில் வெல்கிறார் இடதுசாரி வேட்பாளர்!

சான்டியாகோ, டிச.6- டிசம்பர் 19 ஆம் தேதியன்று நடைபெற விருக்கும் சிலி ஜனாதிபதித் தேர்தலில் இடது சாரி வேட்பாளரான காப்ரியல் போரிக் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரி விக்கின்றன.

கொழும்பில் பௌத்த அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு-7இல் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, பல்வேறு பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று (06) முன்னெடுத்தனர்.   பாகிஸ்தான் நாட்டில் எரித்து, படு​கொலைச்செய்யப்பட்ட  பொறியியலாளா் பிரியந்த குமாரவின்  கொலையைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் பின்னர்,  பதில் உயர்ஸ்தானிகா் தன்வீர் அஹமட்டிடம் முன்னெடுக்கப்பட்டது.  

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 23  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 15 ஆண்களும் 08 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,484 ஆக அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20 பேரும் 16 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 03 பேரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்சாங் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

மியான்மரின் ஜனநாயக தலைவர் ஆங்சாங் சூகி க்கு மியான்மர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

விஸ்வநாதன், விருதுவேண்டும்

(நடேசன்)

பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த இயக்குநர் சிறீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் ,   “விஸ்வநாதன் வேலை வேண்டும்  “ என்ற பாடல் ஒலித்ததை மறந்திருக்கமாட்டீர்கள்.

வெனிசூலா தேர்தலில் சோசலிஸ்டுகள் அமோக வெற்றி!

தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் 23 மாநிலங்களுக்கு நொவம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தலைiமையிலான ஆளும் ஐக்கிய சோசலிச கட்சி 20 மாகாணங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் தலைநகர் கரகாசும் அடங்கும். இருந்தும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மதுரோவின் வெற்றியை ஊழல் மோசடியால் பெறப்பட்டது என அமெரிக்கா சித்தரித்தது போல இந்த மாநிலத் தேர்தல்களையும் அமெரிக்கா அதனடிப்படையில் குறை கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்தக் குற்றசச்சாட்டு அடிப்படையற்ற, வெறும் காழ்ப்புணர்ச்சியால் ஏற்பட்ட ஒன்று. 23 மாநிலங்களில் மோசடி மூலம் வெற்றி பெற்றவர்கள் ஏன் மற்ற மாநிலங்களையும் கூட கைப்பற்றாமல் விட்டு வைத்தார்கள்?

அமெரிக்கா என்னதான் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினாலும், அமெரிக்காவின் கூட்டாளிகளான ஐரோப்பிய யூனியன் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்தத் தேர்தலைக் கண்காணித்துள்ளனர். ஆனால் அவர்கள் தேர்தலில் மோசடிகள் இடம் பெற்றதாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

அதுமட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாக வெனிசூலாவில் நடைபெற்று வந்த தேர்தல்களைப் புறக்கணித்து வந்த வலதுசாரி எதிர்க்கட்சியினர் இந்தத் தேர்தலில் பங்குபற்றியுள்ளனர். அவர்களை இந்தத் தேர்தலில் பங்குபற்ற வலியுறுத்தி நோர்வேயும் நெதர்லாந்தும் அவர்களுடன் மெக்சிக்கோவில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி சம்மதிக்க வைத்திருந்தனர். எதிர்க்கட்சியினர் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே அமெரிக்காவின் ஆதரவு நாடுகளான நோர்வேயும் நெதர்லாந்தும் அவர்களை இந்தத் தேர்தலில் போட்டியிட வைத்திருந்தனர்.

ஆனால், தேர்தல் முறைகேடாக நடந்தது என எதிர்க்கட்சிகளோ அல்லது அவர்களை வலியுறுத்திப் போட்டியிட வைத்த இரு ஐரோப்பிய நாடுகளோ கூட இதுவரை குற்றச்சாட்டுகள் எதையும் முன் வைக்கவில்லை.

அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் தேசிய சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் இந்தத் தேர்தலைக் கண்காணிக்க வெனிசூலா சென்றிருந்தனர். அவர்கள் தலைநகர் கரகாஸ் உட்பட சில மாநிலங்களில் உள்ள 12 வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிப்பை அவதானித்தனர். அவர்கள் பின்னர் தமது கண்காணிப்பு சம்பந்தமாக அறிக்கையிடுகையில் பின்வருமாறு கூறியுள்ளனர்:

‘எமது அவதானிப்பில் தேர்தல் நடுநிலைமையாகவும், வெளிப்படையாகவும் இருந்ததுடன், வாக்காளர்கள் நம்பிக்கையுடன் இருந்ததையும் காண முடிந்தது. தொழில்நுட்ப ரீதியில் பார்க்கையில் தேர்தல் முறைமை அடிப்படையில் வெளிப்படையானதாகவும், செயல்படும் சக்தியைக் கொண்டதாகவும் (வாக்களிப்பு ஊழியர்கள், இணைப்பாளர்கள், கடமைக்கான தலைவர்கள்), நல்ல வாக்களிப்பு இயந்திரங்களுடன் ஒன்றுபட்ட தேர்தல் முறையைக் கொண்டதாகவும் இருந்தது’.

மேலும் அவர்கள் கூறுகையில்,

‘எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் கூட வாக்களிப்பு முறையில் நம்பிக்கை கொண்டிருந்ததைக் காண முடிந்தது. மேலதிகமாக, வாக்களிப்பு நிலையங்களில் அது திறக்கப்பட்ட போதும் முடிக்கப்பட்ட போதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், தேர்தல் சட்டபூர்வமானவை என்பதும் எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலில் பங்குபற்றியதிலிருந்தும், சாட்சியங்களிலிருந்தும் தெரிய வந்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

வெனிசூலாவின் தேர்தலைக் கண்காணித்த அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் கண்காணிப்பாளர்களுக்கோ அல்லது தேர்தலில் பங்குபற்றிய எதிர்க் கட்சியினரின் தெரியாத ‘தேர்தல் மோசடி’ அமெரிக்காவின் காமாலைக் கண்களுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது என்றால், அது அமெரிக்காவைப் பீடித்துள்ள ஏகாதிபத்தியத் தன்மையுள்ள, ஜனநாயக விரோதமான அடிப்படையான நோயின் தாக்கமே தவிர வேறு எதுவுமல்ல.

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி 21)

 (அ. வரதராஜா பெருமாள்)                    

இக்கட்டுரைத் தொடரின் இதுவரையான பகுதிகளில் இலங்கையின் பொருளாதாரம் எவ்வகைகளில் பரிதாபகரமான நிலைகளில் இருக்கிறது – எந்தளவுக்கு பாதகமான சூழல்களுக்குள் அகப்பட்டுப் போயிருக்கிறது என்பவை விபரிக்கப்பட்டுள்ளன. மேலும், இவை எவ்வாறு இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு மாறி மாறி வந்த ஆட்சியாளர்களின் காலகட்டங்களில் மோசமாக்கப்பட்டு வந்திருக்கிறது – அந்த வகையில் இன்றைக்கும் இலங்கையை ஆளுபவர்களிடம் இலங்கையை நிமிர்த்தி முன்னேற்றப்பாதையில் பயணிக்க வைப்பதற்கான தொலைநோக்கோ திட்டங்களோ தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்து செயற்படுவதற்கான எண்ணமோ இல்லையென்பதையும் எதிர்க்கட்சியினரும் அதில் சற்றும் குறைவிவல்லாதவர்களாகவே உள்ளனர் என்பதையும் இக்கட்டுரைத் தொடரில் மிகத் தெளிவாகவே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் புள்ளிவிபரங்களுடன் ஆதாரப்படுத்தப்பட்டும் உள்ளன. 

மலையகத்தில் விழிப்புணர்வு நடவடிக்கை

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து மலையகத்தில் பல பாகங்களில் பல்வேறு விழிப்புணர்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கமைவாக பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் வன்புணர்வுகளை நிறுத்துவோம் எனும் தொனிப்பொருளில் புரொடெக்ட் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வுகள் நோர்வூட் நகரில் இன்று (5)  இடம்பெற்றது.