ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள்”திருமணத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது, சலூன் கடைகளில் தாடியை எடுக்கக் கூடாது, பெண்கள் தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் விளம்பரங்களில் நடிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றனர்.
Month: January 2022
மலக் கப்பலுக்கு முன்பாக மண்டியிட்ட அரசாங்கம்
‘கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்’
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இடைநிறுத்தம்
வல்வெட்டித்துறையில், வருடாந்தம் தைப்பொங்கல் தினத்தில; நடத்தப்படும் பட்டத் திருவிழா, இந்த ஆண்டும் இடைநிறுத்தப்பட்டு உள்ளது. வல்வெட்டித்துறை உதயசூரியன் திடலில் வருடாந்தம் பட்டத் திருவிழா நடைபெறுவது வழமை. இந்த நிலையில், அந்தப் பகுதி மக்களுக்கும் ஏற்பாட்டுக் குழுவுக்கும் இடையில், நேற்று முன்தினம் (05) நடைபெற்ற கலந்துரையாடலின் பிரகாரமே, பட்டத் திருவிழா இடைநிறுத்தப்பட்டது. அதிகரித்து வரும் கொரோனா பரவலால் கடந்த ஆண்டும் பட்டத் திருவிழா நடைபெறவில்லை. இதேபோன்று, இந்த ஆண்டிலும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகின்றமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, பட்டத் திருவிழாவை இடைநிறுத்த மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். இதையடுத்தே, பட்டத் திருவிழா இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அண்மையில், இந்தப் பட்டத் திருவிழாவை இந்த ஆண்டு சர்வதேச பட்டத் திருவிழாவாக இளைஞர் விவகார அமைச்சுடன் இணைந்து நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விடயம் பல எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை இப்படிதான் மாற்றப்படும்: அறிவித்தார் ஜனாதிபதி
3 குழந்தைகள் பெற்றுக் கொண்டால் அதிரடி சலுகைகள்
2022இல் நாட்டில் பஞ்சம் வருமா?
(வ. சக்திவேல்)
“இதுவரை காலமும் யூரியா உரங்களைப் பாவித்து வந்த எமக்கு, தற்போது ஓர் ஏக்கருக்கு நைதரசன் எண்ணை ஒரு லீற்றர், பொட்டாசியம் 24 கிலோ தந்துள்ளார்கள். இன்னும் பசளை எண்ணை ஒரு லீற்றர் தருவதாகச் கூறியுள்ளார்கள். எமக்குத் தந்துள்ள நைதரசன் எண்ணையில் அரை லீற்றரை 5 கிலோ மண்ணில் கலந்து இரண்டு தடவைகள் விசிறும்படி தெரிவித்துள்ளார்கள். இது எமக்குப் புதிய விடயமாகும். இதனை இம்முறை பாவித்து விளைச்சலைப் பார்த்தால்தான் தெரியும். நோய்க்கு வைத்தியரிடம் சென்றால் மாத்திரைகள் எடுத்து, அதைப் பாவித்த பின்னர்தான் நோய் தீர்ந்ததா இல்லையா என்பது பற்றிக் கூறமுடியும். அதுபோன்றுதான் எங்களுடைய நிலைமையும்.
பின்புலத்தை ஆழமாய் ஆராயவேண்டும்
பல்லின சமூகங்கள், மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழும் நாட்டில் பேசுதல், நடந்துகொள்ளல் உள்ளிட்டவற்றை மிகக் கவனமாகக் கையாளவேண்டும். ஏனைய மதங்கள், அவர்களின் வாழ்வியல் நெறிகளைப் பற்றி ஓரளவுக்கேனும் தெரிந்துவைத்திருப்பது அவசியமாகும். அவ்வாறு தெரிந்திருந்தால் பிற மதங்களை நிந்திப்பதற்கு யாருமே முயலமாட்டார்கள். எமது நாட்டைப் பொறுத்தவரையிலும் இது முக்கியமானது.
நாட்டின் பல பகுதிகளில் மழை
நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இந்த நிலை காணப்படும். இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.