மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் விழா ஒத்திவைப்பு

பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் விழா ஒத்திவைக்கப்படுகிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக சார்பில் ஜன.7 முதல் 12-ம் தேதி வரை 1,100 இடங்களில் ‘நம்ம ஊரு பொங்கல்’ கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதன் நிறைவு விழா மதுரையில் ஜன.12-ல் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனச் சொல்லப்பட்டது.

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவருக்கு சூடு

இந்தியாவின் காஷ்மீரின் குப்வரா மாவட்டத்துக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பிரஜை இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என, இந்திய இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு

(என்.கே.அஷோக்பரன்)

அண்மையில் ‘தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு’ இடம்பெற்றதாகவும் அதைத் தொடர்ந்து, ‘தமிழ் பேசும் கட்சிகளின் ஆவண நகல்’ தயாரிக்கப்பட்டு வருவதாகவும், செய்திக் குறிப்புகள் பதிவுசெய்திருந்த அதேவேளை, இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டவர்கள், அழைக்கப்படாதவர்கள், கலந்து கொண்டவர்கள், கலந்து கொள்ளாதவர்கள் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் பற்றியும் இழுபறிகள் பற்றியும், நிறையப் பதிவுகள் காணக்கிடைக்கின்றன.

தோற்ற மயக்கம் – தூரம் அதிகமில்லை

(கருணாகரன்)

இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் தமிழ்த்தரப்பு கடுமையாக முயற்சிப்பதைப்போன்ற ஒரு “தோற்றம்”அண்மைக்காலமாகக் காணப்படுகிறது. இது தோற்றமா அல்லது மாயையா என்ற குழப்பம் பலருக்குண்டு. அதைப்போலவே அரசியல் தீர்வுக்கு முயற்சிப்பதைப்போலக் காணப்படுகிறதா அல்லது அவ்வாறு காண்பிக்கப்படுகிறதா என்ற கேள்வி பலரிடத்திலும் உண்டு. 

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றாளர் தொகையில் குறைவு. நாட்டில் மேலும் 365 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 588,300 ஆக அதிகரித்துள்ளது.

சுரேஷ் பிரேமச்சந்திரனின் சுத்த முட்டாள் ஒப்பீடு?

(Vaithiyanathan Loganathan)

“உதயன்” போன்ற அபத்தமான செய்திகளை காவும் பத்திரிகைகளும், நச்சு காளான்களாக வெகுத்துவிட்ட YouTube குப்பைகளும் மக்கள் மத்தியில் மலிந்து பிற்போக்குத்தனத்தை வளர்த்துவிட . . . . . . . கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க வசதியாக அமைந்துவிடுகிறது இந்த கடைநிலைத் தமிழ் அரசியல் முட்டாள்களுக்கு!

13 வது திருத்தச் சட்டம் பற்றிய ஒரு அலசல்

அ. வரதராஜப்பெருமாள்

(2009 ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை தற்போதைய சூழலுக்கும் பொருந்தி இருப்பதினால் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது)

உங்களின் புதிருக்கு வரதரின் விடை

உங்களின் புதிர்

இலங்கையின் அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டம் மாகாண சபைக்கான அதிகாரங்களை அளிப்பதில் திருப்தியற்ற ஒன்று என்று 20 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை அரசுடன் அரசியல் ரீதியில் போராடி அந்த 13வது திருத்தத்துக்கு மாற்றாக பத்தொன்பது அம்சக் கோரிக்கைகளை இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பொறுப்பாளியான இந்திய அரசுக்கும் அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கும் முன்வைத்தீர்;;கள். அத்துடன் மாகாணசபையின் உத்தியோக பூர்வமான தீர்மானமாக இலங்கை அரசுக்கும் முன் வைத்தீர்கள். ஆனால். இப்போது அதே 13 வது அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கலை நிறைவேற்றினால் தமிழ்மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளைத் திருப்திப்படுத்தக் கூடிய நிலைமை ஏற்படும் என்று தமிழர்களில் ஒரு பகுதியினராலேயே கூறப்படுகிறதே! இவைகள் பற்றி உங்களின் அபிப்பிராயம் என்ன? இவ்வாறான போக்குகள் தொடர்பான உங்கள் விளக்கம் என்ன?

குவாதரின் அகிம்சை வெற்றி சொல்லும் கதை

பாகிஸ்தானிய அடக்குமுறை அதிகாரத்துக்கு எதிராக குவாதர் கோ ஹூக் டோ தெஹ்ரீக் (குவாதரின் உரிமைகளுக்கான இயக்கம்) நடத்திய அகிம்சை போராட்டங்களின் வெற்றி, இம்ரான் கானின் அரசாங்கத்தின் பாதிப்பைக் காட்டுகிறது.

100 கோடி டொலர் கடன் தருகிறது இந்தியா

டொலர் பற்றாக்குறையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபஞ்ச புதிர்களுக்கு விடை தேடும் பயணம் ஆரம்பம்

ஜேம்ஸ் வெப் என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய விண்வெளித் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.  பிரெஞ்ச் கயானாவிலுள்ள ஏவுதளத்திலிருந்து, ஏரியன் ரொக்கெட் மூலம்  சனிக்கிழமை அது பூமியிலிருந்து ஏவப்பட்டது.