ஒமிக்ரோன் வைரஸ் தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாக உயிருடன் இருக்கும் என்றும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கும் மேல் உயிர்வாழும் என்று தெரியவந்துள்ளது.
Month: January 2022
13 வது திருத்தச் சட்டம்: முன்னாள் வடக்கு கிழக்கு மகாண சபை முதல் அமைச்சர் வரதராஜப் பெருமாள் ஒளி ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி
இன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகள் அனைவரும் இலங்கை அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தில் உள்ள உறுப்புரைகளை முறையாகவும் முழுமையாகவும் மீள்வாசிப்பு செய்வது அவசியமாகும். இவ்விடயத்தில் உணர்ச்சி வசப்படாமை. கடந்த காலம் தொடர்பிலான உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகாமை, நிராகரிப்பு கோட்பாட்டைக் கடைப்பிடிக்காமை என்பன மிக மிகப் பிரதானமானதாகும்.
ஈழ விடுதலை வரலாறு பற்றி…
(அ. வரதராஜப்பெருமாள்)
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை பக்க சார்பற்று நேர்மையாக எழுத வேண்டும்- சொல்ல வேண்டும் என்று சொல்லுகிற ஒவ்வொருவரும் தாங்கள் நேரடியாக பங்கு பற்றாத தங்களுக்கு நேரடியாக தெரியாத விடயங்கள் பற்றி குறிப்பிடுகையில் தங்களுக்கு வசதியாக ஏதோ முழுமையாக உண்மைகளைத் தெரிந்த மாதிரி அடித்து விடுகிறார்கள். இப்படியேதான் தமிழர்களின் சொந்த வரலாற்றறிவு இருக்கப் போகிறது. அதற்கேற்ப தான் எதிர்காலமும் இருக்கும்.
கனடா உறைபனியில் இறந்த குஜராத்திகள்
இலங்கை சிறையில் உள்ள 55 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை
செலாவணித் தட்டுப்பாடு: 1970களிலும் பஞ்சத்தில் மூழ்கடித்தது
(எம்.எஸ்.எம். ஐயூப்)
மின்சார விநியோகத்தைத் தடையின்றி நடத்திச் செல்ல, மின்வெட்டைத் தவிர வேறு வழியே, அரசாங்கத்துக்கு இல்லை என்று தான் தெரிகிறது. மின்சாரத்தோடு சகலதும் சம்பந்தப்பட்டு இருக்கும் நிலையில், மின்வெட்டுத் தொடர்ந்தால், நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில், சகல நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியாமல் போய்விடும்.
சைக்கிளில் சென்றால் ஊக்கத் தொகை
ரஷ்யாவின் எச்சரிக்கையும், புவி அரசியலும்
(க.ஆனந்தன்)
கியூபா ஏவுகணை நெருக்கடி க்குப்பின் அதற்கு சற்றும் குறைவில்லாமல், உக்ரை னில் ரஷ்யா ஆக்கிரமிக்கப் போகிறது என்ற பிரச்சாரத்தை அமெரிக்க நேட்டோ படை கள் கட்டவிழத்து விட்டு கிட்டத்தட்ட ஒரு யுத்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியைப் பொறுத்த வரை அவர் பதவிக்கு வந்த ஓராண்டு என்பது தோல்விகளின் ஆண்டாக உள்ளது, ஏற்கனவே அவர் மிகுந்த விளம்பரத்துடன் ஏழை மக்களுக்கும் முதி யவர்களுக்கும் வாக்குறுதி அளித்தது போல் “பில்ட் பேக் பெட்டர்” திட்டம் தோல்வி யில் முடிந்தது.
அடுத்து குடியரசுக் கட்சியினர் ஆளும் மாநிலங்களில், சிறுபான்மை மக்கள் மற்றும் கருப்பின-லத்தீன் மக்கள் வாக்க ளிப்பதை தடுக்க கொண்டுவந்த சட்டங் களைத் தடுக்க, அனைத்து மக்களின் வாக் குரிமையை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட வாக்குரிமைச் சட்டம் செனட்டில் அவரது கட்சியினர் இருவராலேயே தோற்கடிக்கப் பட்டது.
ருவாண்டா படிப்பினைகள் – 02
இனச் சுத்திகரிப்பும் மீளெழலும்
(Thiruchchelvam Kathiravelippillai)
1994.04.06 ஆம் நாள் தன்சானியாவின் தலைநகரான டொடோமாவில் ருவாண்டாவிலிருந்து உகண்டாவில் அடைக்கலம் பெற்றிருந்தவர்களால் ருவாண்டாவில் நல்லாட்சி அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ருவாண்டா நாட்டுப்பற்றாளர் முன்னணியானது (Rwandese Patriotic Front – RPF) வரலாற்று முக்கியத்துவம் மிக்க அமைதி ஒப்பந்தமொன்றில் அப்போதைய ருவாண்டா நாட்டின் குடியரசுத் தலைவர் ஜுவன்ட் கவியரிமான ( Juvend Habyarimana) உடன் கையெழுத்திட்டனர்.
கேட்டிருப்பாய் காற்றே…
(தென்னவன் வெற்றிச்செல்வன்)
மரபான உணவுப் பயிரான நெல் உற்பத்தியிலிருந்து காலனியத்துக்குக் கொள்ளை லாபம் தரும் பணப்பயிர் உற்பத்திக்கு மாறியதால், உலகெங்கும் உழைப்பு சக்தி தேவை உருவாக்கப்பட்டது. ரப்பர் தோட்டம், தேயிலைத் தோட்டம், காபித் தோட்டம், கரும்புத் தோட்டம் போன்றவற்றுக்கு மட்டுமல்லாமல், சுரங்கத் தொழில், இருப்புப் பாதை அமைத்தல், காட்டை அழித்து வசிப்பிடமாக்குதல் என்று 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய காலனிய காலத்தில் தமிழர்கள் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுப் புலம்பெயர்ந்தனர்.