அல்பிரட் துரையப்பா வை சுட்டுக்கொன்று 10 சதத்திற்கு விற்கப்பட்ட புலி இலக்கியம் மீண்டும் சந்திக்கு..

தமிழீழ விடுதலைப்போர் எம் சமூகத்திற்கு விட்டுச்சென்றுள்ள பொக்கிஷங்களிலொன்று நீண்டதோர் துரோகிகள் பட்டியலாகும். இப்பட்டியலில் முன் வரிசையில் இருப்பவர் யாழ் மண்ணில் மக்கள் சேவகனாக பழம்பெரும் தமிழ் அரசியல் கட்சிகளை சுயேட்சையாக நின்று தோற்கடித்த அல்பிரட் துரைப்பா அவர்களாவார். அவர் ஆலயவழிபாட்டை முடித்து வருகையில் ஒழிந்து நின்று பிரபாகரன் சுட்டுக்கொன்றபோது, யாழ் மண்ணே கண்ணீரால் நனைந்திருந்தது.

சோவியத் குடியரசு போல சீனா சிதறும் ஆபத்து; சீன வெளியுறவு துறை எச்சரிக்கை

சீனாவின் சி.பி.பி.சி.சி. எனப்படும் அரசியல் ஆலோசனை உயர் மட்டக் கமிட்டி தலைவரான ஜியா குய்ங்குவா சர்வதேச பாதுகாப்பு ஆய்வு இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: சோவியத் குடியரசு தேச பாதுகாப்புக்காக அளவிற்கு அதிகமாக ராணுவத்திற்கு செலவு செய்தது. அதனால் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்க நேர்ந்தது.

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்கான அறைகூவலும் சாத்தியமின்மையும்

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கை தமிழர் அரசியலை, குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில், அதைப் பற்றிப் பேசும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரும், தமிழர் அரசியலில் ‘ஒற்றுமை’ வேண்டும் என்று கூறுவது, உலக சமாதானம் வேண்டும் என்று உலகத் தலைவர்கள் சொல்வது போன்ற சம்பிரதாயபூர்வமான சொற்றொடராகவே மாறிப்போயுள்ளது. 

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கு 2-வது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு

இந்தியாவில் கொரோனா 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

வெளியிடப்பட்ட அதிர்ச்சி ஆவணங்கள்… பீதியில் டிரம்ப்

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் அதிபர் பதவியில் இருந்த காலகட்டத்தில் அவர் அமெரிக்க ராணுவத்துக்கு அளித்த ஓர் உத்தரவு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பண்ணை வீட்டில் நடிகர்களின் பிணங்களா? சல்மான் கான் மீது பக்கத்து வீட்டுக்காரர் குற்றச்சாட்டு

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் நடிகர்களின் பிணங்கள் புதைக்கப்பட்டு வருவதாக பகீர் கிளப்பும் குற்றச்சாட்டுக்களை அந்த பண்ணை வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் நபர்கள் சுமத்தி இருப்பது பாலிவுட்டையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நடிகர் சல்மான் கானின் பன்வெல் பண்ணை வீடு அவரது சகோதரி அர்பிதாவின் பெயரில் உள்ளது. சமீபத்தில் அந்த தோட்டத்தில் தான் நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்தது குறிப்பிடத்தக்கது.

பிரபஞ்ச புதிர்களுக்கு விடை தேடும் பயணம் ஆரம்பம்

ஜேம்ஸ் வெப் என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய விண்வெளித் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.  பிரெஞ்ச் கயானாவிலுள்ள ஏவுதளத்திலிருந்து, ஏரியன் ரொக்கெட் மூலம்  சனிக்கிழமை அது பூமியிலிருந்து ஏவப்பட்டது. அரை மணிநேரத்தில் அது தனது முதற்கட்டச் சுற்றுப்பாதைக்குச் சென்றுசேர்ந்தது.

ஆரம்பமான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகச் சந்தை

12 வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தை நாளை மறுதினம் வரை இடம்பெறவுள்ளது.  இதற்கு யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து எல்.ஈ.சி.எஸ் (LECS) நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள நிலையில் சர்வதேச வர்த்தக மன்றம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியன இதற்கு அங்கிகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5G யால் விமான நிறுவனங்கள் அச்சம்

5ஜி தொழில்நுட்பத்தினால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படும் என அமெரிக்க விமான நிறுவனங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. இது குறித்து அமெரிக்கன் எயார்லைன்ஸ், டெல்டா எயார்லைன்ஸ் மற்றும் யுனைடெட் எயார்லைன்ஸ் ஆகியவற்றின் தலைமை நிர்வாகிகள், அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 5ஜி தொழில்நுட்பத்தால் விமானப் பயணிகள், சரக்கு ஏற்றுமதி மற்றும் மருத்துவ விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் விமான ஓடுபாதைகளின் அருகே இருந்து 5G சமிக்ஞைகள் விலக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக பரவல் நிலையை அடைந்தது ஒமிக்ரோன்

இந்தியாவில் ஒமிக்ரோன் தற்போது சமூக பரவல் நிலையை அடைந்துள்ளது என இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் INSACOG அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல பெருநகரங்களில் ஒமிக்ரோன் ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  INSACOG அமைப்பு வெளியிட்ட வாராந்த அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்றும் வேகமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.