புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச் செயற்பட விருப்பம்

இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கு, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச் செயற்பட விருப்பம் தெரிவித்த ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ, அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறும் லோர்ட் தாரிக் அஹமட்டிடம் கேட்டுக்கொண்டார்.த உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன என்று, ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் (Lord Tariq Ahmad) தெரிவித்தார்.

குத்துச்சண்டை வீராங்கனைக்கு அமோக வரவேற்பு

குத்துச்சண்டை  போட்டியில்  தங்கப்பதக்கம் வென்ற  கணேஸ் இந்துகாதேவிக்கு  வவுனியாவிலும்  மாங்குளத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

மலையக மக்களின் பிரஜாவுரிமையும் பிரேமதாஸவும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

வரலாற்றில் நடைபெறும் அனைத்தையும் மக்கள் ஞாபகத்தில் வைத்திருப்பதில்லை. பெரும்பாலான விடயங்களை, பெரும்பாலானவர்கள் மறந்துவிடுகிறார்கள். இதனால், அரசியல்வாதிகள் மக்கள் முன் வந்து, நடந்ததை நடக்கவில்லை என்றும் நடக்காததை நடந்தது என்றும் கூறி அரசியல் இலாபம் அடைய முடிகிறது.

கனடாவின் கருத்துக்கு இலங்கை ஆட்சேபனை

தவறான மற்றும் காலாவதியான தகவல்களை உள்ளடக்கிய மற்றும் இலங்கையின் உண்மையான நிலைமையை பிரதிபலிக்காத வகையில் 2022 ஜனவரி 13ஆந் திகதி வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான கனேடிய பயண ஆலோசனை தொடர்பில் சில விடயங்களை வெளிநாட்டு அமைச்சு திருத்தி வெளியிட்டுள்ளது.

’மைத்திரியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்’

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமைக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளின் கடிதத்துக்கு அரசாங்கம் அதிரடி பதில்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்க் கட்சிகள் சில இணைந்து, கடிதமொன்றை தயாரித்தது. அந்தக் கடிதம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் நேற்று (18) கையளிக்கப்பட்டது.

வாரிசு அரசியலும் குடும்ப ஆட்சியும் ஜனநாயகமும்

(என்.கே.அஷோக்பரன்)

வாரிசு அரசியல் என்பதை, ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வாழையடி வாழையாக அரசியல் கட்சிகளின் தலைமை உட்பட்ட உயர்பதவிகளையும் அதன்வாயிலாக நாட்டின் ஆட்சியில் உயர்பதவிகளையும், தம்மகத்தே கொண்டுள்ளமை என்று வரையறுக்கலாம்.

500 மில். டொலர் கடன் வழங்கியது இந்தியா

பெற்றோலிய உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் டொலர் கடனை இந்தியா வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

பிரித்தானியாவின் பிரதமர் பதவியை இழக்கும் போரிஸ்?

விருந்தொன்றில்  கலந்து கொண்ட காரணத்திற்காக பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson ) தனது  பிரதமர் பதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளம் முழுவதும் சீன எதிர்ப்புப் போராட்டம்

நேபாள மக்களை சீனா தொடர்ந்து ஒடுக்கி வருவதாலும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார இருப்பை அதிகரித்து வருதாலும் நேபாளம் முழுவதும் சீனாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது.