அக்காவுக்கு ஏழைத் தாய்வீட்டு பொங்கல் வரிசை…

ஒருகட்டு கருப்பங்கழி

காய்வெட்டா வாங்கிவந்த

பூவன்பழம் நாலுசீப்பு

கூடவே

ரெண்டண்ணம்

இஞ்சிக்கொத்து மஞ்சக்கொத்து

கடன்சொல்லி வாங்கிவந்த

பூணம் பொடவை ஒண்ணும்

பூப்போட்ட கைலி ஒண்ணும்

வரிசைப்பணம் அம்பதும்

வடக உருண்டை பொட்டலமும்

என

அம்மா அனுப்பிவைப்பாள்

அக்காவுக்கு

பொங்கல் சீர்

உந்திப் பெடல்மிதித்து

சந்தோஷமாய்

சைக்கிளேறிப்போகும்

என்னை

தெருமுனையில் திரும்பும்வரை

கையசைத்து

பின்மறைவாள்

ஆறுமைலுக்கு

அப்பாலிருக்கும்

அக்காவீடு போவதற்குள்

தெப்பலாய் நனைந்திருப்பேன்

தேகமெல்லாம்

வியர்த்திருப்பேன்

தெருமுக்கு கடைநிறுத்தி

தின்பண்டம் கொஞ்சம்

மயிலாத்தாவிடம்

பேரம்பேசி

மல்லிப்பூ ரெண்டுமுழம்

என

என்பங்குக்கு கொஞ்சம்

சீர்வரிசைப்பைக்குள்ளே

சேர்த்தே

எடுத்துப்போவேன்

” வாடா” தம்பியென

வாஞ்சையோடு அழைக்கும்

அக்காவின் வீட்டுக்குள்

வெரால்மீனு கொழம்பும்

மசால்வடையும்

மணக்கும்

எப்படியும் வருவான்

தம்பியென

கெவுளிச்சத்தத்தை வைத்தே

கணித்துசெய்திருப்பாள்

அக்கா

பனைவிசிறி தந்துவிட்டு

மோரெடுத்துவர

உள்ளறைநோக்கி ஓடும்

அக்காவுக்கு

பிறந்தவீட்டு சீரைக் கண்டு

பெருமை

பிடிபடாது.

பாக்கு இடிக்கும்

மாமியாக்காரி

பார்க்கட்டும் என்பதற்காகவே

தெருத்திண்ணையிலேயே

பரத்திவைப்பாள்

பிறந்த வீட்டு

சீதனத்தை.

“இந்த

இத்துப்போன வாழைக்காயத்

தூக்கிட்டுத்தான்

இம்புட்டுத்தூரம்

வந்தானாக்கும்”

என்னும்

நக்கலுக்கு வெகுண்டு

நாசிவிடைக்க

கிளம்புகையில்

பதறிஓடிவந்து

பாதையை மறிப்பாள்

அக்கா.

வரிசைப்பணத்தைக்

கையில்திணித்துவிட்டு

“வர்றேன்க்கா” என்ற

ஒற்றைச்சொல்லுக்கு

ஓலமிட்டு

அழுவாள்

அழுகை அடக்கி

சிரிக்கமுயன்று

கண்ணீர்மறைத்து

கவலை விழுங்கும் அக்காவை

இன்றுநேற்றா

பார்க்கிறேன்

வரிசை குறித்த

வாக்குவாதங்கள்

வருடந்தோறும்

அரங்கேறியபடிதான் இருக்கும்

அக்காவின்

புகுந்தவீட்டில்

சைக்கிள்தள்ளி

விருட்டென ஏறிமிதிக்கையில்

“வெறும்பயக் குடும்பத்துக்கு

வீறாப்புக்கு கொறச்சலில்லே”

என்னும்

குத்தல் வாசகம் கேட்டு

உச்சிவெயில்கணக்காய்

உள்ளம்

கொதிக்கும்

வெரால்மீனுகொழம்பும்

மசால்வடைவாசமும்

தெருமுனைவரை

என்னை

துரத்திவந்து

பின்மறையும்

உச்சிவெயிலில்

ஆவேசங்கொப்பளிக்க

பசித்தவயிறோடு

திரும்பும் நான்

எப்படிக் கேட்கமுடியும்

அக்காவிடம்

அம்மா கேட்டனுப்பிய

சாயம்போன இரவிக்கை

இரண்டும்

கட்டிப் பழசான

சேலை ஒன்றும் ?

(Rajinikanthan Kanthan)

யாழ்ப்பாணம் பெயர்பெற்ற வரலாறு !

1901 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ராவ் பகதூர் சி . வை .தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம் எனும் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது ( பி .டீ .எப் ) யாழ்ப்பாணம் எனும் பெயர் அந்த ஊருக்கு வந்த காரணத்தை அதன் முகப்பில் ஈழச் சிறப்பு எனும் பகுதியில் இடம்பெற்றிருந்தது .

உ.பி. தேர்தலை உலுக்கும் சாதி அரசியல்

உத்தரப் பிரதேசம் உள்ளட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 மாநிலங்களில் பாஜக ஆளும் கட்சியாக இருப்பதாலும், நாட்டின் மிக முக்கியமான மாநிலமான உ.பி.யில் தேர்தல் என்பதாலும் பாஜகவுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: ’சதி என்பது தெளிவாகத் தெரிகிறது’

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஒரு சதி என்பது தெளிவாகத் தெரிகிறது என்று தெரிவித்த கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்,  ஜனாதிபதித் தேர்தலை மனதில் கொண்டு இது செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஆர்வமுள்ள சில நபர்கள் இந்திய உளவுப் பிரிவு வழங்கிய தகவல்களை புறக்கணித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.

அங்கொட லொக்காவுக்கும் புலிகளுக்கும் தொடர்பு

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் செயற்பாட்டாளரான  சபேசன் உள்ளிட்ட சிலருக்கும்,  இலங்கை நிழல  உலகதாதா  அங்கொட லொக்காவுக்கும் இடையே  தொடர்பு இருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சொல்லிச் சொல்லி தமிழைத் திருத்த வேண்டிய துர்ப்பாக்கியம்

அரசியலமைப்பை மீறி, ஏதாவதொன்று இடம்பெறுமாயின் அதனை திருத்தவேண்டிய முழுப்பொறுப்பும் அதிகாரிகளிடமே உள்ளது. அதுமட்டுமன்றி, பிரதான சட்டமான அரசியலமைப்பைப் பின்பற்றவேண்டியது மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் அதிகாரிகளினதும் தார்மிக பொறுப்பாகும். அவ்வாறு இருக்குமாயின் தப்பித்தவறியேனும் தவறுகள் இடம்பெறாது.

’நம்பகமான பங்காளியாக எப்போதும் இருப்போம்’ – இந்தியா

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் இன்று பிற்பகல் விரிவான மெய்நிகர் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் உறுதியான மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திறப்பு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை தொடர்பில் கனடா விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் வாழும் கனடா பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாக கனடா கூறியுள்ளது.

உலகின் கடும் வெப்பமான ஆண்டாக ’2021’ பதிவு

உலகில் மிக அதிக வெப்பம் மிகுந்த ஆறாவது ஆண்டாக 2021 வகைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய தகவல்கள் அதற்குச் சான்றாய் அமைந்திருப்பதாக, அமெரிக்கப் பருவநிலை ஆய்வாளர்கள் கூறினர்.  உலக மக்கள் தொகையில் சுமார் கால்வாசிப் பேர் கடந்த ஆண்டு கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர்.