மகாவா மறைந்தது; சோகத்தில் கம்போடியா

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ‘மகாவா “ என அழைக்கப்படும் எலியானது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடவுச்சீட்டுக்கு 102ஆவது இடம்

2022 இல் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளின்  கடவுச்சீட்டுக்கள்  2022க்கான உலகின் மிகச் சிறந்த  கடவுச்சீட்டுகள்  என்று  தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா….

(தோழர் ஜேம்ஸ்)

பலரையும் இணைந்து செயற்பட்ட ஆளுமை. ஈழ விடுதலைப் போராட்டதின் போராளிகளில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பலராலும் அறியப்பட்ட நேசிக்கப்பட தோழமை. கலை, இலக்கியம் பத்திரிகைத் துறை, விவசாயம் என்று பலதுமாக வாழ்கையில் ஓடிக் கொண்டிருந்து ஓட்டம். எந்த விடயத்தையும்… யாருடனும் மிகவும் நிதானத்துடன் அணுகும் ஆழமான பார்வை… செயற்பாடு. குழுவாதத்திற்குள் உள்படாத பண்பு..

சமூக மாற்றத்திற்கு கரம் கொடுக்கும் ’’ மலையக விழிகள் ’’அமைப்பு

பதுளை -கந்தேகெதர பகுதியை தளமாகக் கொண்டு கடந்த வருடத்தின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட “மலையக விழிகள்” அமைப்பானது, நம்நாட்டிலிருந்து வாழ்வாதாரம் தேடி மத்திய கிழக்குக்குச் சென்றுள்ள நம்மவர்களின் எண்ணக்கருவில் உதயமாகியுள்ளது. 

ஒமைக்ரோனுக்கான புதிய தடுப்பூசி அறிமுகம்

ஒமைக்ரோன் வைரஸ் தொற்றுக்கு எதிராக புதிய தடுப்பூசியைத்  தயாரித்து வருவதாகவும்,வரும்  மார்ச் மாதம் அதன் பணி நிறைவடையும்  எனவும் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிழக்கு முனைய பணிகளை ஆரம்பித்தார் ஜனாதிபதி

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இன்று (12) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தமிழ் அரசியல் கைதிகள் ஐவர் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் ஐவர், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் பல்கலைக் கழகம்: மாணவர்களுக்கு இடையில் தொடரும் மோதல்

யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை கலவரம்; எமில் ரஞ்சனுக்கு மரண தண்டனை

கடந்த 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு விசேட மேல் நீதிமன்றம், இன்று (12)  தீர்ப்பளித்துள்ளது.

உக்ரைனில் அதிகரிக்கும் சீனாவின் புவிசார் அரசியல் முயற்சி

(Freelancer)

உக்ரைனில் சீனாவின் பன்முகத் தன்மை கொண்ட ஆர்வம், அதன் மூலோபாய புவியியல் இருப்பிடம், உயர்நிலை சோவியத் பாதுகாப்பு அமைப்புகளின் தொழில்நுட்பம் ஆகியவை பீஜிங்கின் செல்வாக்கை கீயேவில் அதிகரிக்க வழிவகுத்துள்ளது.