சென்னை மேயர் பதவியை விசிக கோருகிறது? சாந்தி என்கின்ற யாழினியை ….

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் ஆளும் தி.மு.க கூட்டணி அதில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகமெங்கும் இருந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அறிவாலயத்திற்கு வந்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து செல்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ”உங்களில் ஒருவன்” வரலாற்று நூலை வெளியிடுகிறார் ராகுல் காந்தி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள “உங்களில் ஒருவன்” புத்தகத்தின் முதல் பாகத்தை, நாளை சென்னையில் நடைபெறும் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிடுகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை விளக்கும் வகையில், “உங்களில் ஒருவன்” என்ற பெயரில் வரலாற்று நூலை எழுதியுள்ளார்.
1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகள் இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. “உங்களில் ஒருவன்” வரலாற்று நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை – நந்தம்பாக்கத்தில் உள்ள ‘சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில்’ நாளை (பிப்ரவரி 28) மாலை நடைபெற உள்ளது.

ராகுலை அழைத்த ஸ்டாலின்: 2024 தேர்தல் மெசேஜ்!

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராமில் அந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அழைப்பிதழ் வந்திருந்தது.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் சுய வரலாற்று நூலான உங்களில் ஒருவன் நூலின் முதல் பாகம் பிப்ரவரி 28 ஆம் தேதி காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியால் வெளியிடப்படுகிறது.

ரஷ்யா… உக்ரெய்ன்…

‘இரண்டு நாடுகளின்

தலைவர்கள் மட்டுமே

பேசித் தீர்ப்பதாயிருந்தால்

இரு குவளை மதுவோடு

நின்றுவிடும் போர்!’

இவ்விதம் ஓர்

அருமையான

பதிவைப்

பதிந்திருந்தார் ஜீவா சுப்பிரமணியன்.

Jeeva Subramaniyan

சோவியத்தின் கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது (பகுதி 4)

(சாகரன்)

தடைகளும், படைகளும் விடைகளை கொடுக்காது… போரை நிறுத்தாது… சமாதானத்தை ஏற்படுத்தாது…. மாறாக தடையற்ற பேச்சுவார்த்தைகள் விட்டுக் கொடுப்புகள்தான் போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்தும். மனித குலம் கடந்து வந்த வரலாறு அவ்வாறானது. அந்த சமாதானத்தை வேண்டியே தொடர்கின்றேன்..

உக்ரைன் ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு

ஒரு சிறப்பு நடைமுறை மூலம் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு உக்ரைன் அதிபர் Zelenskyy ஐரோப்பிய ஒன்றியத்தை அவசரமாக கேட்டுக் கொண்டார்.

சற்றுமுன் ஆரம்பமானது பேச்சுவார்த்தைகள்

இரண்டாம் இணைப்பு

பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது என்று உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் கூறுகிறார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பெலாரஸ் எல்லையில் சற்றுமுன் ஆரம்பித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய விமானத்தை அழித்தது ரஷ்யா

உக்ரைன் நாட்டில் நான்கு நாட்களைக் கடந்தும் போர் தொடரும் நிலையில், தலைநகர் கீவ் நகர் அருகே உள்ள விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலகிலேயே மிகப் பெரிய விமானத்தை ரஷ்ய ராணுவம் அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 11)

(சிவராசா கருணாகரன்)

இதற்கு முன்னர் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் நடந்த போராட்டங்களும், கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களும் குறிப்பாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகளும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பு தனியே புலிகளுக்கு மட்டும் இருக்கவில்லை. சகல தமிழ் மக்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இருந்தது. இந்திய மத்திய அரசு தன்னுடைய தீர்மானங்களில் அல்லது நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தினால் நிலைமை சாதகமாக மாறும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு எதிராகவே நிகழ்ச்சிகள் நடந்தன.

உக்ரைனுடன் கை கோர்த்த ‘எலோன் மஸ்க்‘

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 4ஆவது நாளாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.