ஹப்புத்தளை நகரில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் தலைமையில் மாபெரும் புரட்சி போராட்டம் ஒன்று இன்று நடைபெற்றது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் மலையக மக்களின் இருப்பை உறுதி செய்யவும் அவர்களுடைய தொழில் பிணக்குகள் தொடர்பாகவும் இந்த போராட்டத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 12 ஆண்களும் 11 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,777 ஆக அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 18 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 04 பேரும் 30க்கு கீழ் ஒருவரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரசாயன உர தட்டுப்பாடுக்கு மத்தியில் நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தி 2020 ஆம் ஆண்டை விட அதிகரித்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் மீண்டும் சிக்கியுள்ளனர்.
தஞ்சாவூரில் நேற்று(பிப்.,10) பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதியிடம், ‘நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு என்னாச்சு?’ என, பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வருடத்தில் எனக்கு கிடைத்த மகிழ்ச்சிகரமான ஒரு செய்தியாக இது அமைந்துள்ளது.இதற்க்கு முழுமையான காரணகர்த்தா திரு அமல்ராஜ் உதவி தேர்தல்கள் ஆணையாளர் அவர்களே.ஒவ்வொரு புதிய வாக்காளரையும் காலத்துக்கு காலம் பதிவேடுகளுக்குள் வரவைக்க மேற்கொண்ட பிரயத்தனம் அளப்பரியது.இன்னும் வாய்ப்பிருக்கு 8வது ஆசனமாக்க அதுக்கு கொழும்பில் வாக்காளர் பதிவை கொண்ட ஒவ்வொரு யாழ்ப்பாணியும் புலம்பெயர் தேசங்களில் இலங்கை கடவுச்சீட்டுடன் இருப்பவர்களும் இரட்டைப்பிரஜாவுடமையுடையவர்களும் தயவு செய்து உங்களின் வாக்காளர் பதிவுகளை யாழில் சரிபார்த்து பதிவுகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் உங்களுக்காக இல்லை எண்டாலும் நாட்டில ஊரில இருக்கிற எங்களுக்காக
2015 இருந்துவெற்றிகரமாக இயங்கிவந்த இலங்கை உயர்தொழிநுட்பவியல் நிறுவகம் (Vavuniya Ati – ஓமந்தை) மாணவர்கள் பற்றாக்குறை காரணமாக மூடப்படும் தருவாயில் உள்ளது. 2020 வரையும் HNDA, HNDIT, HNDE ஆகிய மூன்று பாடநெறிகள் காணப்பட்டது. தற்போது HNDIT பாடநெறி நீக்கப்பட்டு HNDA மற்றும் HNDE ஆகிய பாடநெறிகள் மட்டுமே காணப்படுகின்றது.
இம்முறை 2021 கல்வியாண்டிற்கான மாணவர்கள் ஆட்சேர்ப்பு நடைபெறும் வேளையில்,இலங்கை பூராகவும் 20000 மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்க பெற்ற வேளையிலும் Vavuniya Ati -ஓமந்தை பாடநெறியை தொடங்குவதற்கு தேவையான மாணவர் எண்ணிக்கையை பூர்த்தி செய்யவில்லை இதன் காரணத்தால் இலங்கை உயர்தொழிநுட்பவியல் நிறுவகம் வவுனியா (vavuniya Ati-ஓமந்தை) மூடப்படும் அபாயத்தில் உள்ளது.
2020 மற்றும் அதற்கு முன்னர் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய சித்தி அடைந்த மாணவர்கள் தம்மை இனைத்து கொள்ள முடியும். இங்குமுழுநேரம் மற்றும் பகுதிநேரமாக கற்றுக்கொள்ள முடியும். இது 100% இலவசமாக கற்றுக்கொள்ள முடியும்.இந்த வாய்ப்பை நாங்கள் தவற விடுவதன் மூலம் வருங்காலகளில் கல்விகற்ற உள்ள எமது மாணவர்களும் பாதிக்கபடுவார்கள் .
2015 முன்னர் HNDA பாடநெறி கற்பதற்காக எம்மவர்கள் பலர் திருகோணமலை மற்றும் யாழ் நோக்கி செல்லும் தேவைப்பாடு காணப்பட்டது . அவர்கள் தற்போது அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றார்கள். இலங்கை உயர்தொழிநுட்பவியல் நிறுவகம் வவுனியா (vavuniya Ati- ஓமந்தை) மூடப்படுமாக இருந்தால் வவுனியா மாணவர்களுக்கு அதே நிலைமை ஏற்படும். அதை தடுக்கும் எண்ணம் இருப்பவர்கள் தகுதி உடைய மாணவர்களக்கு தெரியப்படத்துங்கள்.
மேலதிக தகவல்கள் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும். இனையவழியாகவும் விண்ணப்பிக்க முடியும்.வவுனியாவில் கற்பிக்கும் நான் அறிந்த சில ஆசிரியர்களை Tag செய்து உள்ளேன். நமதுமாணவர்கள் பலன் அடையட்டும் அதிகமாக பகிருங்கள்
திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் மாநில செயலாளராக இருந்த நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று (பிப்ரவரி 5) தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் நடைபெற்ற காணொலிக் கலந்துரையாடலில் பங்கேற்று, வழிகாட்டுதல்களை வழங்கி உரையாற்றினார் திமுக தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலின்.