ஆலங்குளத்தான்

(Thamotharam Pratheevan)

சுமார் 37 வருடங்களின் பின்னர் (1983 ம் ஆண்டின் பின்னர்) கடந்த 2021.10.22 ம் திகதி வெள்ளிக் கிழமை ஆலங்குளத்தானின் அனுமதியும் ஆசீர்வாதமும் பெறப்பட்டு அந்த பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்களின் பங்களிப்போடும் ஆதரவோடும் சிறிய சிரமதானம் ஒன்று செய்யப்பட்டு பூஜையும் செய்யப்பட்டது.

சடலங்களாக கரை ஒதுங்குவதுதானா வடக்கு மீனவர்களின் விதி?

(புருஜோத்தமன் தங்கமயில்)

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் இருந்து ஜனவரி 27ஆம் திகதி வியாழக்கிழமை,  சிறிய படகொன்றில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர், நான்கு நாள்களின் பின்னர், சடலங்களாக மீட்கப்பட்டனர்.

நிர்வாணமான சட்டம்

ஜனநாயக நாடொன்றில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலையுமாக இருக்குமாயின் அங்குதான், போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கும். அப்போது  சட்டம், ஒழுங்கைப்   பேணுவதற்காக முப்படையினரையும் களத்தில் இறக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுகின்றது.

“எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம்”

கடற்கரை சூழலில் காணப்படும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்க கூடிய கழிவு பொருட்களை அப்புறப்படுத்தும் முகமாக “எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம்” எனும் தொனிப் பொருளில் சிரமதான செயற்திட்டம் மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்களை அனுமதிக்கவும் – ஸ்டாலின்

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கவலை வெளியிட்டுள்ளார். 

முடக்கப்படுமா நாடு?

நாட்டை முடக்குவதற்கோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ அரசாங்கம் தயார் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். நாடு தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கு மத்தியில், கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான தேவை கிடையாது என அவர் கூறுகின்றார்.

நீட் விலக்கு விவகாரம் – ஆளுநர் மாளிகையை முற்றுகையிட தயாராகும் கட்சியினர்

 நீட் விலக்கு மசோதாவை நிராகரிப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அமைப்பினரும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். 
தமிழக அரசு இதுதொடர்பான விரிவான விளக்கத்தைத் தெரிவித்துள்ளது. 
ஆளுநரின் முடிவைக் கடுமையாக எதிர்ப்பதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், 

மலையக – தாயக திரும்பியோருக்கான இயக்கத்தின் நோக்கம் குறித்து சில குறிப்புகள்

பிரிட்டிசாரின் வருகையும் தமிழர்கள்  வெளியேற்றமும்.

வணிகத்துக்காக வந்த பிரிட்டிசார் இந்திய நாட்டைத் தமது காலனி நாடாக ஆக்கினர். நாட்டை ஒட்டச் சுரண்ட அனைத்துவகையிலும் உரிமை மீறலைக் கையாண்டனர். மூலதனத்தைக் குவிக்கத் தொடங்கியவர்களின் பசித்தீரவில்லை. அதை மென்மேலும் பெருக்கிக்கொள்ள தமது ஆதிக்கத்தின் கீழுள்ள நாடுகளில் பயிர் உற்பத்தியில் ஈடுபடுத்த, இந்தியாவில் இருந்து மக்களை கொண்டுசெல்லும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பக்க விளைவுகள் ஐந்து மடங்கு அதிகரிக்கும்

கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகளை விட கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் சுமார் ஐந்து மடங்கு அதிகம் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியை டாக்டர் பிரியதர்ஷனி கலப்பத்தி இதை தெரிவித்தார். தடுப்பூசியை பெறும் போது வாந்தி, குமட்டல், காய்ச்சல் போன்ற சாதாரண பக்கவிளைவுகளே ஏற்படும். மேலும், சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்படும் மருந்துகளை உட்கொள்வது ஆபத்தானது எனவும் டாக்டர் பிரியதர்ஷனி கலப்பத்தி தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி குண்டை வெடிக்கவைத்து உயிரிழப்பு. அமெரிக்க படையால் சுற்றிவளைக்கப்பட்டார்

அமெரிக்காவின் விசேட படைப்பிரிவினர் சிரியாவின் மேற்குபகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு விசேட நடவடிக்கையில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி கொல்லப்பட்டுள்ளார்.
தங்களது படைகளால் சுற்றிவளைக்கப்பட்டவேளை ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி குண்டைவெடிக்கவைத்ததாகவும், அவரும் அவரது குடும்பத்தினரும் இதன்போது கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.