நாடற்ற நகரம்

(Rathan Ragu)

கடந்த சில வருடங்களாக ஐரோப்பா மற்றும் கனடாவில் உள்ள நகரங்கள் நட்புரீதியான ஓர் இணைப்பை இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் உள்ள நகரங்களுடன் ஏற்படுத்தியுள்ளன. அண்மையில் லண்டன்-இங்கிலாந்தின் புறநகரமான நியு மோல்டனுக்கும் யாழ்ப்பாணத்துக்குமான நட்பு இணைப்பைப் பற்றிய செய்திகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகின. 2017 தை 14 அன்று ரொரன்ரோ நகரின் வட கிழக்கில் அமைந்துள்ள மார்க்கம் நகரம் முல்லைத்தீவு நகரத்துடன் ஓர் நட்பு இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.. அதே போன்று ரொரன்ரோ நகரம் கிளிநொச்சி நகரத்துடன் ஓர் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் அரசியல் மூலோபாய, தந்திரோபாய அரசியலின் தேவை (பகுதி2)

(வி. சிவலிங்கம்)

போரிற்குப் பின்னதான தாக்கங்களும், மாற்றங்களும் 

சமீப காலமாக தமிழ்த் தேசியம் குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ள நிலையில் வெறுமனே கனவுகள் அல்லது அபிலாஷைகள் போன்றன மட்டும் சமூக மாற்றத்தைத் தருமா? என்ற கேள்விகள் எழுகின்றன. கடல் வளம், விவசாய நிலங்கள், இளைஞர் தொகை, வெளிநாட்டு வருமானம் போன்றன இருப்பதாக கூறுவதன் மூலம் மாற்றம் ஏற்படுமா? தமிழ்த் தேசியம் என்பது சமூகத்தின் பல்வேறு கூறுகளை இணைக்கும் அடிப்படைகளைக் கொண்டிருத்தல் அவசியம், அதற்கான பொது அடிப்படைகள் குறித்த விவாதங்கள் தேவை. அவ்வாறாயின் தமிழ் சமூகத்தின் இன்றைய இருப்புக் குறித்த தெளிவான ஆய்வு அவசியம். குறைந்த பட்சம் கிடைக்கும் புள்ளி விபரங்களின் அடிப்படையிலான குறைந்தபட்ச மதிப்பீடாவது அவசியம்.  

தனித்துவம் மிக்க தேசிய கொடி

(என்.மிருணாளினி)

சுதந்திர தினமான இன்று, எமது தேசிய கொடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த எமது தேசத்துக்கு, 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரம் கிடைத்தது. அடிமைத்தனத்தில் இருந்து எமது தேச மக்களுக்கு விடுதலை கிடைத்தது. அன்றைய தினம் தேசிய விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. எமது மக்கள் அனைவரும் தேசிய கொடியைத் தம் வீடுகளிலும் வேலைத் தளங்களிலும் பொது இடங்களிலும் பாடசாலைகளிலும், பறக்கவிட்டு மரியாதை செய்கின்றனர்.

சுதந்திர தினத்தின் மகத்துவம் அர்த்தப்படும் புரிதல்

(நளீர் அஹமட்)

இத்தேசம், 15 ஆம் நூற்றாட்டின் இறுதிக் காலப்பகுதியிலிருந்து 450 வருடங்களுக்கு மேற்பட்ட காலம், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என அந்நியரின் ஆதிக்க ஆட்சியின் கீழ் இருந்தது. 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி, அந்நிய ஆதிக்க ஆட்சியலிருந்து சுதந்திரம் பெற்றது.

கடலில் போராட்டத்தில் குதித்த மீனவர்கள்

வடமராட்சி மீனவர்கள், தமது போராட்ட முறையை மாற்றி கடலில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி கிழக்கு  மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்க்ளின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரியும் ஐந்தாவது நாளாக இன்றைய தினமும் வடமராட்சி மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். 

இலங்கை: கொரனா செய்திகள்

பாதிப்பு, மரணங்கள் சடுதியாக அதிகரிப்பு. இந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 3)

(சிவராசா கருணாகரன் )

இவ்வாறு இக்கட்டான நிலையில் போர்க்களத்தில் நின்று உயிரிழந்த இளைஞர்களும் பெண்களும் ஆயிரக் கணக்கில் அடங்கும். சனங்கள் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இடப் பெயர்வைச் சமாளிப்பதா? இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொளவதா? பிள்ளைகளைக் காப்பாற்றுவதா என்று தெரியாத பேரவலம் ஒரு பெரும் சுமையாகச் சனங்களின் தலையில் இறங்கியது. சனங்களுக்கும் புலிகளுக்குமிடையில் மோதல்கள் உருவாகின. இறந்த பிள்ளைகளின் உடலை பெற்றோரிடம் காட்டுவதற்கே புலிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டது. பல பெற்றோர் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் புலிகளைத் தாக்கியிருக்கின்றனர். 

வட்டை, போட்டா, கணத்தை, மறுகா, கணகாட்டு, பொருபத்தல் (மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள்)

(செங்கதிரோன்) 

வட்டை, போட்டா, கணத்தை, மறுகா, கணகாட்டு, பொருபத்தல் 

சென்றதடவை மட்டக்களப்பு மாநிலத்துக்கு மட்டுமே உரித்தான மண்வாசனைச் சொல் ‘கா’ பற்றிப் பேசினோம். 

இத்தடவை வேறு பல விசேட சொற்களை எடுத்து நோக்குவோம். 

How a double agent in Madras helped change the course of the subcontinent’s history

(VENKATESH RAMAKRISHNAN)

IT might be hard to imagine Madras as the nerve centre of a high-stakes, international espionage operation. Thanks to its languid, laid back approach to life, it might seem even futile to conjure up a super-spy episode in this part of the country, except within the febrile imagination of storytellers and filmmakers. Back in 1954, the Sivaji Ganesan starrer Andha Naal (That Day), a murder-mystery cum spy thriller which was inspired by Akira Kurosawa’s Rashomon, had the proud distinction of being Tamil cinema’s first noir feature, and that too set in Madras.

தமிழர்களும் கலந்ததுதான் சிங்கள சமூகம்! சிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல! யாழ் பேராசிரியர்

(ந ரவீந்திரன்)

சிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல! சீமான் சொல்வது பொய்! தமிழர்களும் கலந்ததுதான் சிங்கள சமூகம் யாழ்ப்பாண பேராசிரியர் ந ரவீந்திரன்
அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பாக, இன்று  சேலத்தில் “சாதியும் சமூக மாற்றமும் ” எனும் தலைப்பில் இலங்கை யாழ்ப்பாண  பேராசிரியர். ந.ரவீந்திரன் உரை நிகழ்த்தினார்.