மீளமுடியா நெருக்கடிக்குள் நாடு

(புருஜோத்தன் தங்கமயில்)

நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியை, எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல், ராஜபக்‌ஷர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைத்ததைக் காட்டிலும், படுமோசமான குழிக்குள் இப்போது விழுந்துவிட்டார்கள்.

உக்ரேன்: ரஷ்யாவை ஐ. அமெரிக்கா, ஜி7 பொறுப்புக்கூற வைக்கும் – பைடன்

இன்று காலையில் ஜி7 நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கவுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யாவுக்கு எதிரான மேலும் தாக்கமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார். உக்ரேனுக்கெதிராக போரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆரம்பித்த பின்னரே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

உக்ரேனில் இராணுவச் சட்டம் பிரகடனம்

உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததை அடுத்து, உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அந்நாட்டில் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.

ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: உக்ரேன்

ரஷ்யாவின் 5 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக, உக்ரேன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், உக்ரேன் ஆயுதப்படை வெளியிட்ட அறிக்கையில் “அமைதியாக இருங்கள். உக்ரேன் ஆதரவாளர்களை நம்புங்கள்” என,  தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரேன் கூறுவதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

மன்னார் நகரில் பசுமையான நகரத் திட்டம்

பசுமையான நகரத் திட்டத்தின் கீழ், மன்னார் நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக, மன்னார் நகரை சுத்தமாக வைத்திருக்கும் நோக்குடன், கழிவுப் பொருள்களை தரம் பிரித்து சேகரிக்கும் குப்பைத் தொட்டிகள் மன்னார் நகரப் பகுதிகளில் வைக்கப்பட்டன.

காரைநகரில் இந்திய மீனவர்கள் 22 பேர் கைதாகினர்

காரைக்கால் மற்றும்  நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று (23) இரவு கைது செய்யப்பட்டனர்.

பெலாரஸ் – ரஷ்யா கூட்டு சேர்ந்து உக்ரைனை தாக்குகின்றதா?

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் பெலாரஸ் இராணுவம் பங்கேற்கவில்லை என்று அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறினார். பெலாரஸ் நாட்டின் பெல்டா மாநில செய்தி நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.

NATO இராணுவ அவசர கூட்டத்திற்கு போரிஸ் ஜோன்சன் அழைப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐரோப்பாவிற்கு ஒரு பேரழிவு என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறுகிறார். மேலும் நேட்டோ இராணுவ கூட்டணியின் அவசர கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார். “இது எங்கள் கண்டத்திற்கு ஒரு பேரழிவு,” என்று ஜோன்சன் ட்விட்டரில் கூறினார். 

“யார் குறுக்கே வந்தாலும் வரலாறு காணாத அழிவு தான்” – ரஷ்யா எச்சரிக்கை

ரஷ்யாவின் பாதையில் குறுக்கிடுபவர்கள் வரலாறு காணாத அளவு மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்க ஆரம்பித்துள்ளன.

ரஷ்ய அதிபரின் அதிரடி உத்தரவு

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று ரஷ்ய அதிபர் விலாதிமிர் புடின் கூறியுள்ளார். இதேவேளை, உக்ரைன் இராணுவத்தை ஆயுதங்களைக் கீழே போடுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். “நான் ஒரு இராணுவ நடவடிக்கையின் முடிவை எடுத்துள்ளேன்,” என்று அவர் தொலைக்காட்சி   அறிக்கையில்  கூறினார்.