21 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 03 வருட சிறைத்தண்டனை விதித்து பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிருஷந்தன், இன்று (21) உத்தரவிட்டார்.

போர் பதற்றம்; விமானங்கள் ரத்து

உக்ரைன் – ரஷ்யா இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அந்த நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. 

யாழில் இருந்து வந்து முல்லையில் தாக்குதல்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதுடன் 13 பேர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அவுட் லுக் நோட்டீஸ்

இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியாரிடம் கேட்டு பங்குச்சந்தை தொடர்பான முடிவுகளை எடுத்த  தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அவுட்லுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரவிந்தனின் கேள்விகளுக்கு எனது பதில்கள்

(மாசி 2022ல் எதிரொலி எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டது)

1. கேள்வி:- தமிழரின் அரசியலில் 13 பற்றிய பேச்சுக்கள் இப்போது தீவிரமாகியுள்ளன. இதனுடைய இன்றைய நிலை மற்றும் எதிர்காலச் சாத்தியங்கள் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன?

யாரும் சுத்தம் இல்லை – 40 ஆண்டுகளுக்கு விடிவு இல்லை

(கருணாகரன்)

1.

30 ஆண்டுகளுக்குள் இலங்கையில் மகிழ்ச்சிக்குரிய எந்தப் பெரிய மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை. தமிழரின் அரசியலில் 40 ஆண்டுகளுக்குள் எந்த நம்பிக்கையளிக்கக் கூடிய முன்னேற்றங்களும் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. 

புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 8)

(சிவராசா கருணாகரன்) 

புலிகளின் மரபின்படி எப்போதும் பிற தரப்பினரைக் குற்றம் சாட்டும் இயல்போடு தம்மைப் பற்றிய மீள் பரிசீலனை, சுய விசாரணை எதுவுமில்லாமல் அவர்கள் இயங்கினார்கள். இந்தக் குணாம்சத்துடனேயே அவர்களின் மீடியாக்களும் இயங்கின. புலிகள் களத்திலிருந்து கொடுக்கும் தகவல்களை எந்தவிதமான மறுவிசாரணைகளும் இல்லாமல் சுய சிந்தையே அற்றுப் புலம்பெயர் தேசங்களில் உள்ள – அவர்களின் ஏஜென்ஸிகளாக இயங்கும் – ஊடகங்கள் பரப்புரை செய்தன. இதுதான் அடுத்த பெரிய தவறாக அமைந்தது.

கனடாவில் பார ஊர்த்திகளின் போராட்டம்

(Rathan Ragu)

மூன்று வாரங்களுக்கு மேலாக கனடாவில் பார ஊர்தி தொழில் நிறுவனத்தினர் கனடாவின் தலை நகரில் களங்கொண்டு போராட்டங்களை நடாத்திவருகின்றனர்.

கல்வியை விட ஹிஜாப் முக்கியம்..: மகளை பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்ற தந்தை!

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு திங்கட்கிழமையன்று பள்ளிகளில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நேற்று ஏராளமான மாணவிகள் பள்ளிகளையும், தேர்வுகளையும் புறக்கணித்து வீடு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கோரி ஐந்து முஸ்லிம் மாணவிகள் தொடுத்த வழக்கை விசாரித்து வரும் கர்நாடக உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை மாணவர்கள் எந்தவொரு மதம் சார்ந்த ஆடைகளை அணிந்து செல்ல அனுமதியில்லை என்று உத்தரவிட்டது.

போர் மூளும் அபாயம்- உக்ரைனில் இருந்து ரஷ்யர்கள் வெளியேற்றம்

மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உக்ரைனில் இருந்து ரஷ்ய குடிமக்களை வெளியேற்ற கிரெம்லின் வட்டாரம் திட்டமிட்டுள்ளது.