இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த 47 இந்திய மீனவர்கள் இன்று காலை சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
Month: February 2022
அமெரிக்க துணைத் தூதரை நீக்கியது ரஷ்யா
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் முடிவு
துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, நாளை காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான நேரத்திற்குள் மாணவர் ஒன்றியம் அமைப்பதாக உறுதிமொழியை வழங்கினார்.
இலங்கைச் செய்தி: கொரனா செய்திகள்
அதிகரிக்கும் கொரோனா மரணங்கள். நாட்டில் நேற்றைய தினம் 23 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் இது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,949 ஆக அதிகரித்துள்ளது.
“சீனாவினால் முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது”
பாகிஸ்தானில் மீண்டும் தலைதூக்கும் தீவிரவாதம்
கஜன்களின் ‘பல்லிளிக்கும்’ அரசியல்
யாழ்.பல்கலையில் பதற்றம்: வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம்
யாழ்.பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இதனால் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் என எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத நிலையில் வீதியில் காத்திருக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த சில மாதங்களாக செயலிழந்து காணப்படுகின்றன. அதனை அங்கீகரிக்குமாறு கோரியே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்யாவை எச்சரிக்கும் ஜி 7 நாடுகள்
எல்லை தாண்டலுக்கு முற்றுப்புள்ளி
(லக்ஸ்மன்)
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையின் பிரதிபலன் மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது. எல்லை தாண்டுவதும் அதற்காக கைது செய்வதும், பறிமுதல் செய்வதும் தண்டனை வழங்குவதும், படகுகளை அரசுடமையாக்குவதும், கைதாகும் மீனவர்களைப் பரிமாறிக்கொள்வதும் என்று தொடர்ந்து கொண்டிருக்கும் இரு நாடுகளின் கடல் எல்லைப் பிரச்சினையால் யாருக்கு இலாபம் அதிகம் என்று சிந்திப்பதனைவிடவும் இதிலுள்ள அரசியலை ஆழ்ந்து ஆராயவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.