அக்கரப்பத்தனை,டயகம பகுதிகளில் தொடர்ச்சியாக கோவில்கள் உடைக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன. இந்நிலையில் இன்று (16) காலை அக்கரப்பத்தனை- கிளாஸ்கோ வல்லடையான் கோயில், மோனிங்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மற்றும் கிளபோர்க் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆகியன இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு உண்டியல்களிலுள்ள பெருந்தொகையான பணமும் தங்க நகைகளும் களவாடப்பட்டுள்ளன.
Month: February 2022
இலங்கைச் செய்தி: கொரனா செய்திகள்
வாகன விபத்தில் பிரபல நடிகர் மரணம்
ஹிந்து, இஸ்லாம், ஹிஜ்ரா, புர்கா,பர்தா டர்பன், முக்காடு….
புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 7)
(சிவராசா கருணாகரன்)
ஆனால், ஒரு கட்டத்தில் மருத்துவமனைப் பகுதியை அண்மித்து நின்று விடுதலைப்புலிகள் கனரக ஆயுதம் மூலமாகப் படையினர் மீதும் விமானப் படையின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதை சிறிலங்கா அரசின் வேவு விமானம் (இது அமெரிக்கத் தயாரிப்பு, ஆளில்லா வேவு விமானம். அமெரிக்கா இந்த விமானத்தை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தது) வட்டமிட்டு நோட்டமிட்டது. (இந்த விமானம் எப்போதும் வானத்தில் பறந்து கொண்டேயிருக்கும். இந்த வேவுக் கண்ணை வைத்தே சிறிலங்கா அரசு போரில் பெரும் வெற்றியைப் பெற்றது.) வேவு விமானத்தின் தரவுகளின் படி புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீது படைத்தரப்பு தாக்குதல் நடத்தி அதைத் தரைமட்டமாக்கியது.
பிரதமர் உருத்திரகுமாரனின் கனவுகளுக்குள் யதார்த்தத்தைத்தேடி….!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE)…..!
இது தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட 115 உறுப்பினர்களும், 20 நியமன உறுப்பினர்களுமாக, மொத்தம் 135 உறுப்பினர்களைக் கொண்டது. அமெரிக்க நியூயோர்க்கை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. இந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் யாழ்.மேயர் இராசா விஸ்வநாதனின் புதல்வர். விடுதலைப்புலிகளின் சட்ட மற்றும் அரசியலமைப்பு நிபுணர். 2010 மே மாதம்17 ம் திகதிதியில் இருந்து உருத்திரகுமாரனின் அரசாங்கம் தமிழீழத்தில் “எக்ஸ்ஸில்ஆட்சி” நடாத்துகிறது.
அநுராதபுரக் கூட்டமும் பொதுவேட்பாளருக்கான போட்டியும்
(என்.கே.அஷோக்பரன்)
எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது கொவிட்-19 நோய்த்தொற்றுப் பரவல் காலகட்டத்தில் எதிர்க்கட்சிகள் அப்படி ஆர்ப்பாட்டம் நடத்தியது நோய்ப்பரவலை அதிகரிக்கும் என்று விமர்ச்சித்துக்கொண்டிருந்த அரசாங்கம், அண்மையில் தானும் ஒரு பெரும் எழுச்சிக் கூட்டத்தை நடத்தியிருந்தது.