(சாகரன்)
என்னதான் நடந்தது…
என்னதான் நடக்கின்றது….
என்னதான் நடக்கப் போகின்றது….
The Formula
கொழும்பிலும், புறநகர்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை ஐந்து மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொழும்பு – மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம் முன்னெடுத்த நிலையில், கொழும்பில் பல இடங்களில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ள தமிழக முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சுமார் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேச்சுவார்த்ததை நடத்தினார். இதன் போது, இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் எனவும், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வழியாக உதவிகளை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது புதல்வரான அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும் ஒரேமாதிரியான அறிவிப்பை விடுத்துள்ளனர். முன்னதாக அறிவிப்பை விடுத்திருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது அமைச்சு மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் கடமையாற்றுவோர், வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறைமைக்கு மாறுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
(தோழர்கள்)
கந்தன் கருணையில்
கருணையற்றுப் பாசிசப்புலியின்
துவக்குச் சூட்டால்
துடிக்கப் பதைக்க
மாண்டவர்கள் நாங்கள்
பேசுகிறோம்…
ஏனென்று கேட்காமல்
எதுக்கென்றும் கூறாமல்
எங்களைக் கைதுசெய்தீர்களே
எங்கேயிப்போது நீங்கள் ?
எங்களை நிராயுதபாணியாக்கி
சித்திரவதைப் பண்ணி
கொன்றுதான் போனீர்களே
எங்கே நீங்கள் ?
எங்கள் மூச்சுக்கள்
காற்றில் கலக்கும்போது
நாங்கள் விட்ட
சாபப் பெருமூச்சு
ஒருநாள் நீதிகேட்கும்…
துவக்கோடும் பீரங்கியோடும்
நவீன ஆயுதத்தோடும்
கொலைவெறித் தாண்டவமாடிய
உங்களின் நிலை
இன்று என்னாச்சு?
எங்களைத் தொலைத்த
நேசிப்புக்கு உரியவர்கள்
இன்றும் எங்களைத்
தேடிக் கொண்டிருக்கிறார்கள்
பாசிசம் முதலில்
முற்போக்காளர்களை அழிக்கும்
கடைசியில் தன்னைத்தானே
அது அழித்துவிடும்…
எவ்வளவோ உதாரணங்கள்
இருந்தும் ஏற்கமறுத்தீரே
மற்றவர் கருத்துக்கு
தலையசைக்க மறந்தீரே
உயர்த்தித் தூக்கிப்பிடித்த
உங்கள் தலைவன் மரணத்ததையே
வெளியில் சொல்லமுடியாத
நீங்களெல்லாம் போராளிகளா ?
ஈழத்தாயின் மடியில்
நித்திரை கொள்ளும்
மாண்டுபோன நாங்கள்
மீண்டும் வருவோம்
பாசிசத்தின் வேர்கள்
அனைத்தும் அறுபடும்வரை
எங்களை நினைவேந்துவோர்
இருக்கும் வரை
கந்தன் கருணையில்
மாண்டுபோன நாங்கள்
மீண்டும் வருவோம்
மனம் கலங்கி உதவிக்கரம் நீட்டும் ‘பெரியண்ணா’வின் பெரியமனம்
எதற்கும் தட்டுப்பாடு என்றொரு நிலைமையே, நாட்டில் நிலவுகின்றது. ஒரு பக்கத்தில் விலையேற்றம்; மறுபுறத்தில் தட்டுப்பாடு. இடையில் சிக்குண்டிருக்கும் மக்கள், விழிபிதுங்கி நிற்கின்றனர். அந்தளவுக்கு ‘பஞ்சம்’ ஒவ்வொருவரது கழுத்தையும் நெருக்கிக்கொண்டிருக்கின்றது.