பெருந்தோட்ட நிர்வாகத்தினரின் முறையற்ற நிர்வாகத்தால் 87,000 தோட்டத் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்குச் சென்றுள்ளனர் என, தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
Month: March 2022
நாடு முழுமையாக மூடப்படும் அபாயம்
சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. மின் வெட்டால், வர்த்தக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது. பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நேட்டோ
தினக்குரல் லெவ்ரின்ராஜ் அவர்களின் கேள்விகளுக்கு அ. வரதராஜப்பெருமாளின் பதில்கள்
மே 9-க்குள் ரஷ்யா போரை நிறுத்திக்கொள்ள விரும்புகிறது?
மே 9-ம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா விரும்புவதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. போரின் தொடக்கத்தில் உக்ரைனின் ராணுவ வீரர்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை மட்டுமே குறிவைத்துத் தாக்கிய ரஷ்யப் படைகள், போகப்போக அப்பாவி மக்களையும் தங்கள் குண்டுகளுக்குக் குறியாக்கிக் கொல்லத் தொடங்கின.
சீனாவில் வேகமெடுக்கும் கோவிட்; ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு அமல்
சீனாவில் கோவிட் பரவல் அதிகரிக்க துவங்கியதை அடுத்து, ஷாங்காய் உள்ளிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கோவிட் பரவல் வேகமெடுத்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கடும் கட்டுப்பாடுகளை சீனா அமல்படுத்தி வருகிறது. அதேபோல், சில நகரங்களில் தீவிர ஊரடங்குகளையும் சீனா அமல்படுத்தி வருகிறது.
மூப்பில்லா தமிழே தாயே…. முதலிடம் பிடித்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்
ஏ.ஆர்.ரஹ்மானின், ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற புதிய பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான், தற்போது புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலை உருவாக்கி இருகிறார். மார்ச் 24ஆம் தேதி துபாய் எக்ஸ்போ-வில் ரகுமானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், தற்போது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
டிராகன் பிடியில் இலங்கை?
இலங்கையிலிருந்து வெளிவரும் காட்சிகள் போர் காலச் சூழலை நினைவூட்டுகின்றன. பெட்ரோல் நிலையங்களில் மக்கள் அலைமோதுகின்றனர்; கிலோ மீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. சென்ற வாரம், பெட்ரோல் வாங்க வரிசையில் நிற்பதில் தகராறு ஏற்பட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நீண்ட வரிசையில் காத்திருந்ததில் 3 முதியவர்கள் உயிரிழந்தனர். பெட்ரோல் நிலையங்களில் கூட்டத்தை சமாளிக்க ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தெற்காசியாவின் வறிய நாடாக மாறிவரும் இலங்கை
இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக்கொண்டே வருகிறது. டாலருக்கான பெறுமதி கூடிக்கொண்டே வருகையில், இலங்கை ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே வருவதோடு, நாட்டின் வெளிநாட்டு நிதிப் பிரிவு நெடுங்காலமாகச் சரிவைச் சந்தித்துவருகிறது. அதனால், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்ததற்கு ஏற்றுமதிச் செலவுக்கும், இறக்குமதிச் செலவுக்கும் இடையே பாரிய வேறுபாட்டையும் முக்கியக் காரணமாகக் குறிப்பிடலாம். இதனால், 500 கோடி டாலர்களுக்கும் அதிகமான நஷ்டம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள்.