ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் கொழும்பின் பல இடங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் பங்கேற்றிருப்பவர்கள்,GOTA GO HOME (கோட்டாவே வீட்டுக்குப் போ) என எழுதப்பட்ட பட்டிகளை தலையில் அணிந்துள்ளனர். பெண்களைப் பொறுத்தவரையில், சாரிகளிலும் அந்த பதாகையை ஒட்டிக்கொண்டுள்ளனர்.
Month: March 2022
அடுத்த சில மாதங்களில் நாட்டை இழக்க நேரிடும் – ரணில்
தேயிலை ஏற்றுமதி முழுமையாக இடைநிறுத்தம்
இருளர் சமூக பெண் மல்லிகா பேரூராட்சி தலைவராக பதவியேற்பு!
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் சந்திப்புக்குக் காரணம்
(லக்ஸ்மன்)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஜனாதிபதி சந்திப்பதானது, ஒருபடி கீழிறங்கலாகவே பார்க்கப்படவேண்டும். இதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சந்திக்கிறார் ஜனாதிபதி என்றும் ஜனாதிபதியைச் சந்திக்கிறது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றும் இன்னும் பலவாறும் பொருள் கொள்ளலாம். எவ்வாறு பார்த்தாலும், நடைபெறவுள்ளது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புதான். சந்திப்புக்கே இரண்டுக்கு மேற்பட்ட வகைகளில் விளக்கம் கொடுக்கமுடியுமென்றால், சந்திப்பு எவ்வாறான விடயங்களை உள்ளடக்கியிருக்கும் என்பதற்கும் பல வியாக்கியானங்களைக் கொடுக்க முடியும்.
தமிழாராய்ச்சி மாநாடும் அரை உண்மைகளும்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை – 10
ஈழத்தமிழர் வரலாற்றில், உணர்ச்சிமிக்கதாகப் பேசப்படுவது யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளில் நிகழ்ந்த வன்முறை பற்றிய கதைகளுமாகும்.
செவிவழிக் கதைகள் போல, இக்கதைகள் அரை உண்மைகளாகச் சொல்லப்பட்டு, இன்று சமூகத்தில் அவை நிலைபெற்றுள்ளன. அச்சம்பவங்களும் அதைச் சூழ்ந்த நிகழ்வுகளும் பற்றிய முழுமையான தேடலோ விசாரணையோ இல்லாமல், இன்றுவரை அக்கதை திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.
தேசிய அரசாங்கத்தால் பயனில்லை – ரணில்
தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுபட தேசிய அரசாங்கங்களை அமைப்பதில் அர்த்தமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு அனைவரும் தேசிய இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். கிருலப்பனையில் நேற்று(13) பிற்பகல் நடைபெற்ற கட்சி மறுசீரமைப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு; விவரம் இதோ
எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, பஸ் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 17 ரூபாயாக காணப்பட்ட ஆகக்குறைந்த பஸ் பயணக் கட்டணம், 20 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன், ஆகக்கூடிய பஸ் கட்டணம் 1,498 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டச் செயலகம் முன் ஈ.பி.டி.பி போராட்டம்
4ஆவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பம்
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ளன. இரு தரப்புக்கும் இடையேயான தொடர்புகள் கடினமாக உள்ளது என்றும், ஆனால் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகரும் பேச்சுவார்த்தையாளருமான Mykhailo Podolyak ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.