இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதவியை இராஜினாமா செய்துவிட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறினார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(04) இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் கட்சியாக ஒரு தீர்மானம் எடுத்து தாம் பதவி விலகுவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கான கடிதம் ஏற்கனவே பிரதமருக்கு அனுப்பப்பட்டு, ஜனாதிபதி அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜீவன் தொண்டமான் ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.
Month: April 2022
கூட்டமைப்பும் நிராகரித்தது
தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘எங்களுக்கும் வலி தெரியும்’ – நெருக்கடியிலும் உக்ரைன் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் இலங்கை மக்களின் மனிதம்
இலங்கை: நிதியமைச்சர் பதவியிலிருந்து சகோதரர் பசிலை நீக்கிய கோத்தபய ராஜபக்சே
இலங்கை நிலைமை ஏற்படலாம்: மோடியிடம் எடுத்துரைப்பு
மாநில அரசுகளின் இலவச திட்டங்களால், இலங்கை போன்ற நிலை ஏற்படலாம் என்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. (நன்றி: தினத்தந்தி)
மலையகத்திலும் பாரிய போராட்டம்
நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ,நுவரெலியாவில் மக்கள் மற்றும் தேரர்கள் இன்று எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நுவரெலியா அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் 300ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு, கோஷங்கள் எழுப்பி போராட்டகாரர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.