
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக மெல்பேர்னில் உள்ள இலங்கையர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரக அலுவலகத்திற்கு முன்பாக “எங்கள் நாட்டை நாசமாக்காதீர்கள்” என்ற போராட்டத்தை இவர்கள் முன்னெடுத்திருந்தனர். இதேவேளை, மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் மற்றும் பெர்த் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (R)