“யாருக்காவது என்னை அனுப்ப முடியுமானால் அனுப்புங்கள்“ என்று தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தான் விரைவில் பதவி விலகப் போவதில்லை என்பதை வலியுறுத்தியுள்ளார்.
Month: April 2022
ராஜபக்ஷர்கள் குடும்பமே கூடிப் பேச்சு
ராஜபக்ஷர்கள் குடும்பமே கூடி, நள்ளிரவு வரையிலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான பசில், சமல் மற்றும் நாமல் ராஜபக்ஷர்கள், உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்துள்னர். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளனர் என்றும் நேற்று (25) நள்ளிரவு வரையிலும் அந்தப் பேச்சுவார்த்தை
தடுமாறும் அரசாங்கத்துக்குச் சட்டங்கள் காவல்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இலங்கையின் இன்றைய நெருக்கடியை, ரம்புக்கனை கொலைகள் இன்னொரு தளத்துக்கு நகர்த்தியுள்ளன. இலங்கையில் அரச பயங்கரவாதம் புதிதல்ல. பொலிஸ் அராஜகத்தின் வரலாறு மிக நீண்டது. ஆனால், செல்வந்தர்கள், உயரடுக்கினர் தவிர்த்து, முழு இலங்கையர்களும் பொருளாதார நெருக்கடியை அன்றாடம் எதிர்நோக்கி இருக்கையில், இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பு திருத்த வரைபு
பிரச்சினைகளால் பற்றி எரியும் நாடு: தமிழ் மக்களின் நிலைப்பாடு
கட்சித் தலைவர்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு கோரிக்கை
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு உடனடியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். அதன்போது, சட்டமா அதிபர், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைவுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளை அழைக்குமாறு சஜித் பிரேமதாச சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஹட்டனில் எதிர்ப்பு போராட்டம்
அதிரடி முடிவை எடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அதிரடியான தீர்மானமொன்றை எடுத்துள்ளார். நீண்டநேர கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு கூட்டுத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயாதீன குழுக்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
‘அரசாங்கம் பதவி விலக ஒரு வாரம் அவகாசம்’
தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்வதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இல்லாவிட்டால் அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தாம் உட்பட 120 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடைக்கால அரசாங்கத்துக்கு தயார்: ஜனாதிபதி
இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு இணக்கம் என்றும், பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பேன். அத்துடன் அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மஹாநாயக்க தேரர்களுக்கு அறிவித்துள்ளார். மேற்குறித்த விவரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என அஸ்கிரிய மாநாயக்க தேரரின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.