வீதிகள் மறிக்கப்பட்டுள்ள இடங்களின் விபரம்

நாடளாவிய ரீதியில் பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. வீதிகளை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால், ​போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் உக்கிரமடையும் ஆர்ப்பாட்டங்கள்

திருகோணமலையில் நேற்று மாலையிலிருந்து பொதுமக்கள் வீதியை மறித்து, டயர்களை எரித்து அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்றும் (20) தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 பௌத்த பீடங்களின் முக்கிய அறிவித்தல்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க மாநாட்டை பிரகடனப்படுத்துவோம் என, மூன்று பௌத்த உயர் பீடங்களின் மகாநாயக்கர்கள் அரசாங்கத்துக்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பியுள்ளனர்.

13 ஆளும் எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு, ஆளுங்கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் 13 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

“ஜனாதிபதி பதவி விலகத்தயார்”

பதவி விலகத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரினால் தாம் பதவி விலகத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கட்சித் தலைமைக் கூட்டத்தில் தெரிவித்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச   தெரிவித்துள்ளார் .

சுறுக்கர் என்ற நடு நிலையாளர்

(சாகரன்)

எழுத்துலகில் சுறுக்கர்….. கோமகன்…. என்றும் பலராலும் அறியப்பட்ட புலம் பெயர் தேசம் பிரான்சில் வாழ்ந்து வந்த தியாகராஜா இராஜராஜனின் மரணம் எதிர்பாராத பேரதிர்ச்சி. கோப்பாயை தாய் மனையாகவும் தம்பசெட்டி என்ற பாரம்பரியம் மிக்க ஊரை வாழ்விடமாகவும் கொண்டவர்.

ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூடு மரணம் ஏன்

கொழும்பில் வாழும் சிங்கள மேட்டுக்குடிகளே கூடுதலாகக் காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதனாலேயே பொலிஸாரும் அந்தப் போராட்டத்தை நிதானமாகக் கையாளுகின்றனர்- சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டே சிங்கள மேட்டுக்குடிகள் போராட்டம் நடக்கிறது. சிங்கள மேற்தட்டு முற்போக்காளர்கள் பலரும் காலிமுகத் திடல் போராட்டத்தில் பங்கெடுக்கின்றனர். ஆனால் ரம்புக்கனையில் நடந்த போராட்டம் அப்படியல்ல- உண்மையாகப் பாதிக்கப்பட்ட சாதாரண சிங்கள மக்களின் போராட்டமே ரம்புக்கனை போராட்டம்.

(அமிர்தநாயகம் நிக்ஸன்)

முகநூலில் எனது பதிவு……

(முகநூலில் வந்த பதிவொன்றின் தமிழ் ஆக்கம்)

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் என்னிடம் “இந்தப் போராட்டம் நேரத்தை வீணடிக்கும் செயலாகும். எதுவும் மாறாது” .

அவர்களுக்கு, நான் சொல்ல விரும்புவது இதுதான்:

Why…. Why….

(Samantha Weeramanthri)

I don’t understand reason for,

Jaffna Library was burnt

Yaledevi is stoped,

Black July happened,

Elam War started,

A-9 have closed

Northern provisional council was suspended (1990),

Delaying provisional council elections Under UNP government…..

Re-established of Jaffna library,

Yaldevi started again,

Elam war is ended,

Development of Northern provincial with required infrastructure,

A-9 opened Provisional council elections were resumed in all 9 provincial councils in 2013,

At least there was president who can speak few Tamil words,

Happened only during Mahinda’s previous Government However Mahinda is considered as racist today,

but owners of Reconciliation are UNPers

சீனாவின் அதிரடி அறிவிப்பு

இலங்கையின் தற்போதைய நெருக்கடியான நிலையை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், இலங்கைக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் பேச்சாளர் சூ வெய் இன்று தெரிவித்தார்.