நிபுணர்களும் தடுமாறும் நிலை

(எம்.எஸ்.எம். ஐயூப்)

சிலவேளைகளில் வரலாறு விசித்திரமானது; சிலவேளைகளில் விந்தையானது. 2019ஆம் ஆண்டு, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைப் பயன்படுத்தி, இனவாதத்தைத் தூண்டி பதவிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் அவரது அரசாங்கமும், இன்று அதே தாக்குதலுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை விந்தையானது.

தம்பியை உரையில் காப்பாற்றும் தமையனின் இறுதி முயற்சி

நெருக்கடியான நிலைமையில், அரச தலைவரொருவர், நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, ஒவ்வொருவரும் காதுகொடுப்பர். உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசமும் கூர்ந்து அவதானிக்கும். நெருக்கடி, யதார்த்தம், மீண்டெழுதல், தூரநோக்கு, உதவிக்கரம் உள்ளிட்டவை பொதுவான சாராம்சமாக இருக்கும்.

70களில் சபிக்கப்பட்ட சிறிமாவின் தன்னிறைவுப் பொருளாதார முயற்சி!

(என்.சரவணன்)

‘பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனை வரை விவசாய நிலங்களாக்குவதே எமது அரசாங்கத்தின் இலக்கு’

என்று சொன்னவர் சிறிமா. பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க 1974ஆம் ஆண்டு ஒக்ரோபரில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த வேளை ஒரு புறம் அவருக்கு எதிரான பலத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. அதே வேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் திறப்புவிழாவுக்காக வந்திருந்த சிறிமாவின் பேச்சில் இருந்த தேசிய விவகாரங்கள் கவனிக்கத்தக்கவை.

அருந்ததியர் சமூகத்தின் ஆவணப் பெட்டகம், தலித்தின் குறிப்புக்கள

(நிலாந்தி சசிகுமார்)

இலங்கையின் வரலாற்றில் அருந்ததியினர் சமூகம் பற்றி வெளிவரும் முதல் நூல் இதுவாகும்.90 களில் சரிநிகரில் வெளிவந்த தொடர் பத்தி தலித்தின் குறிப்புகளாக நூல் வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

சிங்களப் பெயர்களின் சாதிய, நிலப்பிரபுத்துவ, காலனித்துவ பின்புலம்

(என்.சரவணன்)

பரம்பரைப் பெயரை தலைமுறையாக பயன்படுத்துவது உலகிலுள்ள பல நாடுகளில் பல இனக்குழுமங்கள் மத்தியில் நிலவி வருகிற ஒரு  வாக்கம் தான். 
குடும்பப் பெயர் + நடுப்பெயர் + வழங்கப்பட்ட பெயர் என்கிற பெயர்களை சேர்த்து கோர்த்து அழைப்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால் இலங்கையில் சிங்கள சமூகத்தில் “பெயரிடுதல்” என்பது தனிச் சிறப்பைக் கொண்டிருக்கிறது. தனியான முறைமையையும் கொண்டிருக்கிறது. மேலும் வர்க்கம், சாதி, குலப்பெருமை, பதவி, பட்டம், ஊர்ப்பெருமை போன்றவற்றை உள்ளடக்கியதாக இப்பெயர்கள் அமைந்திருப்பதும் அதை தலைமுறை தலைமுறைக்கும் கடத்துவதும் ஒரு பண்பாட்டு வழக்கமாக இருந்து வருகிறது.

எனது பார்வையில் ‘கோல் பேஸ்’ போராட்டமும் – இடைக்கால தீர்வு பொறிமுறையும்!

(Ramachandran Sanath)

‘கோல் பேஸ்’ வருவார்கள், கொடிகளைத் தூக்கிப்பிடித்து, ‘கோ ஹோம் கோட்டா’ என கோஷம் எழுப்புவார்கள், ஓயமாட்டோமென சூளுரைப்பார்கள், ‘செல்பி’ எடுத்து மகிழ்வார்கள், படங்களை வலைத்தளங்களில் பதவிவேற்றம் செய்து பரவசம் அடைவார்கள், பொழுது சாய்ந்ததும் சென்றுவிடுவார்கள், நாமோ வென்றுவிடலாம்.

மேலும் 2 பில். அமெ. டொ. உதவி வழங்கத் தயார் – இந்தியா

இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவிகளை வழங்க தாம் தயாராக இருப்பதுடன், நாட்டின் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடிகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு கைகொடுப்பதற்கும் தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. சர்வதேச செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே மிகச் சரியான சந்தர்ப்பம்

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை ஒன்று உருவாகியுள்ள போதிலும், அதனை சாதகமாக மாற்றவும் நாட்டில் அரசியல் அமைப்பு உருவாக்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க , அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொள்ள இதுவே மிகச் சரியான சந்தர்ப்பமாகும். 

“இலங்கையின் பொருளாதார நிலைமை மிகவும் மோசம்”

இலங்கையின் பொருளாதார நிலைவரம் மிகவும் உறுதியற்ற நிலையில் காணப்படுவதுடன், உயர் கடன் மீளச் செலுத்துகைகள், வரவு செலவு இடைவெளியை குறைப்பது, வெளியக உறுதித் தன்மையை மீளமைத்துக் கொள்வது மற்றும் நாட்டின் வறிய மற்றும் இலகுவில் பாதிப்புறக்கூடிய மக்களுக்கு ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளை தணிப்பது போன்றவற்றை சீராக்கம் செய்வதற்கு அவசரமான கொள்கைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதாக உலக வங்கி ஆண்டில் இரு தடவைகள் வெளியிடும் பிராந்திய தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் திங்களன்று பேச்சு

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நாடு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்த நிதியமைச்சர் அலி சப்ரி, இந்தப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.