நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் புதிய தகவல்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விட்டுச் சென்ற பங்காளிகளை அழைத்தார் கோட்டா: இன்றிரவு முக்கிய பேச்சு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திலிருந்து விலகி, சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்துள்ள பங்காளிகளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து விலகிய, 41 எம்.பிக்களுக்குமே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

தற்போதைய முட்டுக்கட்டைக்கு தீர்வு காண அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்போம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச நாணய நிதிய அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் தற்கால பொருளாதார சிக்கல் பற்றிய கலந்துரையாடல்

இலங்கையின் சமகால அரசியல் , பொருளாதார நெருக்கடிகள்! -உரையாடல் -02

Zoom வழியான தொடர் உரையாடல்!

உரையாளர்கள்: வரதராஜா பெருமாள் முன்னாள் யாழ் பல்கலை பொருளாதாரத்துறை ஆசிரியர், முன்னாள் முதலமைச்சர்

ருக்கி பெர்ணாண்டோ மனித உரிமை செயற்பாட்டாளர்

காலம் – 09 ஏப்ரல் 22 சனி

நேரம் – இங்கிலாந்து 4.00 pm ,ஐரோப்பா5.00 pm , கனடா 11.00 am , இலங்கை 8.30 Pm

வழிப்படுத்தல் எம் . பெளசர் என். சுசீந்திரன்

தொடர்பு Mob, whatsup 0044 7817262980

ஆர்வமுள்ளோர் கலந்தும், தகவலை பகிர்ந்தும் கொள்ளுங்கள்!

Join Zoom Meeting https://us02web.zoom.us/j/89108630945?pwd=QnRjd0t6ZXVOU3pONVQyNk0zbmxRQT09

Meeting ID: 891 0863 0945

Passcode: 942695

ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போர்க்கோலம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக, முழு நாடும் போர்க்கோலம் பூண்டிருக்கின்றது. ராஜபக்‌ஷர்கள் ஆட்சி அதிகாரத்தை விட்டு, வீட்டுக்கு செல்லும் வரை இந்தப் போர்க்கோலம் இன்னும் இன்னும் தீவிரமடையும் நிலையே காணப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் மிரிஹான இல்லத்துக்கு முன்பாக, கடந்த வாரம் மாபெரும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காத்திருக்கும் பாரியதோர் அரசியல், பொருளாதார நெருக்கடி

(எம்.எஸ்.எம். ஐயூப்)

மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் அல்லது ஆயுதப் போராட்டங்கள் மூலம் ஆட்சியாளர்களை விரட்டியடித்த நாடுகள் இருக்கின்றன. பிலிப்பைன்ஸ், டியூனீசியா, எகிப்து, ஈரான், உக்ரைன் போன்ற பல நாடுகளில், மக்கள் ஆயுதம் ஏந்தாமலேயே ஆர்ப்பாட்டங்கள் மூலமாக, ஆட்சியாளர்களைப் பதவியிலிருந்து விலக்கி, நாட்டை விட்டும் ஓடச் செய்தனர். அவ்வாறானதொரு நிலைமை, இலங்கையிலும் உருவாகி வருகிறது போல் தெரிகிறது.

கால சக்கரம் கருணை காட்டாது

மக்கள் எழுச்சியால் சர்வாதிகாரிகளின் சாம்ராஜ்ஜங்கள்கூட சரிந்துள்ளன. கால சக்கரம் என்பது அநீதி இழைப்பவர்களுக்கு கருணை காட்டாது. தற்போது இலங்கை மக்களும் கொதித்தெழுந்துள்ளனர். எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் விரைவில் கவிழும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. சூளுரைத்தார்.  

இலங்கை குறித்து அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அச்சுறுத்தல் அளவை உயர்த்தியதுள்ளது. இலங்கைக்கான விஜயத்துக்கு எதிராக 3 ஆம் நிலை பயண ஆலோசனையை அமெரிக்க பிரஜைகளுக்கு வழங்கியுள்ளது.

இலங்கைக்கு ஐ.நா எச்சரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிற நிலையில், ஐ.நா. சபை முக்கிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐ.நா சபை,

இராஜினாமாவை ஏற்க ஜனாதிபதி மறுப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள இரண்டு இராஜினாமா கடிதங்களை ஏற்க மறுத்துவிட்டார். பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாதன் ஆகியோரினால் அனுப்பிவைக்கப்பட்ட இராஜினாமா கடிதங்களையே ஜனாதிபதி ஏற்க மறுத்துவிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பின்போதே, ஜனாதிபதி அது தொடர்பில் அறிவித்துள்ளார்.