ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (13) நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
Month: May 2022
விமல் அணி அதிரடி தீர்மானம்
10 கட்சிகள் கொண்ட குழு பாராளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக எதிர்க்கட்சியில் இருக்க தீர்மானித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கொழும்பில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சிறுபான்மையினர் நால்வருக்கு வாய்ப்பு?
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை 15 பேருடன் மட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி, பிரதமர் அடங்களாக 17 பேர் மட்டுமே அங்கம் வகிப்பர் என்றும் அறியமுடிகின்றது. அதில், சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த நால்வருக்கு வாய்ப்பு வழங்குவதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.
எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 2)
நடுங்கியது ஆர்ஜென்டினா
தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டினாவில் ஜூஜூய் மாகாணத்தில் இன்று (11) அதிகாலை 4:36 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவு கோலில் 6.6 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் தேசம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
ரணிலை நியமிப்பதற்கு கடும் எதிர்ப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இன்று (12) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த ஓமல்பே சோபித தேரர் மற்றும் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, “ இந்த நியமனம், அரசியலமைப்புக்கு முரணானது” என்றார்.
சுமந்திரன் என்ன கூறுகின்றார்?
இலங்கையில் புதிதாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சுமந்திரன் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். சுமந்திரன் தனது டுவிட்டர் தளத்தில், “ஜனாதிபதி முற்றாக பெரும்பான்மை தன்மையை இழந்துள்ளார். அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது பாராளுமன்றில் வாக்களிப்பு நடத்த உள்ளது. இதேவேளை, விக்ரமசிங்கவிற்கு ஆரம்பத்திலிருந்தே தற்போதைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவர் தனது தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.” என்றுள்ளார்.
பிரதமர் ரணிலுக்கு இந்தியா வாழ்த்து
இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்துபணியாற்ற எதிர்பார்த்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கைகொள்கின்றது என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன், இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு தொடரும்.
பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்: ரணில்
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை காணப்படுகின்ற நிலையில் தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் அதனை நிரூபிக்க தயாராக உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.