எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, நேற்று (11) தெரிவித்தார்.
Month: May 2022
’அரசியலில் ஸ்திரத்தன்மை உருவாகாவிடின் அராஜக நிலையை தவிர்க்க முடியாது’
நாடு மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து அதிலிருந்து மீள்வதற்கான வேலைத்திட்டங்களை கையாள முயற்சித்துக்கொண்டுள்ள நிலையில் நாட்டல் வன்முறைகளும் அராஜகத்தன்மையும் உருவாகின்றதென்றால் அதனை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் அவ்வாறான நிலையில் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவோ அல்லது மீளவோ முடியாது.
பிரதமர் பதவி: பொன்சேகாவுக்கும் அழைப்பு
இடைக்கால அரசாங்கம் அமைக்க கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்படாததன் காரணமாக தற்போதைய அரசியல் முட்டுக்கட்டையை முறியடிக்கும் முயற்சியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் பதவியை வழங்குவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவைத் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .
எழுந்து வர முயற்சிக்கும் இலங்கை (பகுதி 1)
(மே மாதம் 7ம் திகதி கனடாவில் நடைபெற்ற ‘இலங்கையின் அரசியல் கொந்தளிப்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் என்றால் ஆற்றப்பட்ட உரையினை இங்கு தருகின்றேன். இந் நிகழ்வு சமாதானத்திற்கான கனடியர்கள் இலங்கை சார்பு என்ற அமைப்பினால் நடாத்தபட்டது. இதில் தமிழ் சிங்கள முஸ்லீம் மலையக மகள் என்று பலரும் கலந்து கொண்டனர் கருத்துரையாடல் இரு மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது. நீண்ட உரையை பகுதிகளாக பிரித்து தருகின்றேன் – நன்றி)
ஜனாதிபதி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
அனைத்துக்கட்சி கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது. நாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், இன்று நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி கூட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நிரபராதிகள் மீதான அரச பயங்கரவாதத்தின் மிலேச்சத்தன தாக்குதல்
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக ஒரு மாதகாலமாக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட ‘கோட்டா ஹோ கம’, அலரிமாளிகையின் முன்பாக 13 நாள்களாக நடத்தப்பட்ட ‘மைனா ஹோ கம’ மீது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குண்டர்களால் நேற்று (09) மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை கண்டிக்கத்தக்கவை. உலக வங்கி, மனித உரிமை நிறுவனங்கள் உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள், நாடுகள் இத்தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளன.
இன்றைய நாள் மிகவும் மோசமானது: கொழும்பு பேராயர்
இன்றைய நாள் மிகவும் மோசமானது எனவும், எமது நாட்டின் போக்கை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் போராட்டக் களத்திற்கு சென்றிருந்தபோதே கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு தெரிவித்திருந்தார். நாட்டை ஆட்சி செய்யும் தலைமைகள் வீடுகளுக்குச் செலவதுடன், நாடு இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டங்கள் வன்முறை வடிவிலும் தொடர்கின்றன.
கனடா பிரதமர் உக்ரேனுக்கு பயணம்
இராகலையிலிருந்து மேலும் மூவர் புறப்பட்டனர்
அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இராகலை நகரில் இருந்து கொழும்பை நோக்கி மூவர் நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்த மூவரும் இன்று (09) காலை 8மணியளவில் தமது நடை பயணத்தை இராகலை நகரில் ஆரம்பித்தனர். இராகலையைச் சேர்ந்த மொஹமட் நிசாம், எஸ்.கோபாலகிருஸ்ணன் எஸ்.மகேந்திரன் ஆகியோரே நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.