பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Month: May 2022
“மைனாகோகம” பற்றி எரிகிறது: இரும்பு கம்பிகளுடன் அட்டகாசம்
மஹிந்தவைக் கைது செய்ய வேண்டும் – சுமந்திரன்
பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷவையும் தாக்குதல் நடத்தியவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான எம்.ஏ சுமந்திரன், டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவர் தனது கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பதற்றத்தில் இலங்கை
“புதுன் அப்பாச்சி போங்க இப்போதைக்கு போதும்”
வழிபட சென்ற பிரதமருக்கு கடும் எதிர்ப்பு : ஹூ கோஷம்
கோட்டா இங்குதான் பிழை விட்டார்: நாமல்
பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பி.பி.சியிக்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போதிய வருமானமின்றி வரிச்சலுகை வழங்கும் அரசின் முடிவு சரியல்ல என்றும் அவர் கூறினார்.
மாற்றத்தை எங்கிருந்து தொடங்குவது?
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இன்று இலங்கையர்கள் வீதிக்கு இறங்கியுள்ளார்கள்; போராட்டக்காரர்கள் காலிமுகத்திடலை நிறைத்திருக்கிறார்கள். தெய்வேந்திர முனை முதல் பருத்தித்துறை வரை, சங்கமன்கண்டி முதல் கற்பிட்டி வரை, நாலாபக்கமும் இருந்து கோட்டாவை வீட்டுக்குப் போகச் சொல்லும் குரல்கள் ஒற்றுமையுடனும் ஆழமாகவும் கோபமாகவும் ஒலிக்கின்றன.
நாளை அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம்
நாட்டின் தற்போதைய நெருக்கடி மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, நாளை (09) அவசரக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை (09) காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்தக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாடப்படும் என அறியமுடிகின்றது.