இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கடனுதவி திட்டங்களின்கீழ் இலங்கை அரசாங்கத்தால் நீர்த்தாரை வாகனம் ஒன்று இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பாக நாம் அறிந்துள்ளோம். இவ்வாறான செய்தி அறிக்கைகளில் எந்தவிதமான உண்மைத்தன்மையும் இல்லையென இலங்கையிலுள்ள இந்திய இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Month: May 2022
இராஜினாமா கடிதத்தில் மஹிந்த கையொப்பம்
இராஜினாமா கடிதத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கையொப்பம் இட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அது தொடர்பில் அடுத்த வாரம் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. இன்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை அடுத்தே இராஜினாமா செய்யும் தீர்மானத்தை பிரதமர் எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.
பிரதமர் மஹிந்த விடுத்துள்ள அறிவிப்பு
’ஆட்சி மாற்ற சதி’: ஜோ பைடனுக்கு இம்ரான் சவால்
கொரோனா மரணங்கள் இந்தியாவில் மறைக்கப்பட்டது? 47 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழப்பு என WHO அறிக்கை
ரஷ்யாவின் அறிவிப்பால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் முரண்பாடு
நாடு பொருளாதார சிக்கலிலிருந்து மீள நடுவழிப்பாதை என்று ஒன்று உண்டா? Galle Face போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தே ஆகவேண்டும். சஞ்ஜீவ பட்டுவத்த – தமிழில் மனோறஞ்சன்
கடந்த ஆறு மாதங்களில் வீழ்ச்சியடைந்த இலங்கையின் பொருளாதாரம், ஏப்ரல் கடைசி வாரத்தில் பெரும் பாதாளத்தின் விளிம்பை அண்மித்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், அதிகபட்சமாக மே 15 ஆம் தேதி ஆகும்போது, அது எத்திசையை நோக்கி நகரும் என்று கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. இந்திய கடன் சலுகைகளின் கீழ் எரிபொருள் நெருக்கடியானது நீறுபூத்த நெருப்பாக மறைக்கப்பட்டிருந்தாலும், தற்போது நடைபெறும் எரிவாயு விநியோகம் இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.
யார் இந்த தராக்கி சிவராம் ?
புலிகளிடம் இருந்து கருணாவை பிரித்தது யார் ? பிரபாகரனை சந்திக்கப் போன சிவராமை சந்தித்தது பிரபாகரனல்ல பொட்டம்மான்,உருவிய பொட்டம்மானின் துப்பாக்கி அவர் தலையை அழுத்தியது. அந்தக்காலத்திலேயே கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த தந்தைக்கு மட்டக்களப்பில் பிறந்து பேராதனைப் பல்கலைகழகத்தில் படித்தவர் தான் தராக்கி சிவராம், இவரின் இறந்த நாள் இன்று, இவரின் இறப்பு மர்மமானதொன்று. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கட்சியை உருவாக்குவதில் சிவராம் என்கின்ற தராக்கியே முக்கிய பங்கு வகித்தார்.
இங்கிலாந்து அரசியை பின் தள்ளிய இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் பிரதமர் வாய்ப்பை இழக்கும் இவரின் கணவர்
இங்கிலாந்து அரசியை பின் தள்ளிய இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் இந்திய மனைவியின் வரி விவகாரம்: பிரதமராகும் வாய்ப்பை இழக்கும் இங்கிலாந்து அமைச்சர் தனிப்பட்ட சொத்து மதிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை பின்னுக்குத் தள்ளி, அந்நாட்டு நிதி அமைச்சரின் மனைவியும், இந்தியப் பெண்ணுமான அக்சதா மூர்த்தி முதலிடத்தை பிடித்துள்ளார்.
கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு நகரும் IT நிறுவனங்கள்
கர்நாடகாவில் வகுப்புவாதம் காரணமாக அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க ஆட்சி நடைபெறும் கர்நாடகத்தில் சமீபகாலமாக மத ரீதியான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. ஹிஜாப் பிரச்சினை கடுமையாக வெடித்து இன்னும் ஓயாத நிலையில் இந்து கோவில்களுக்கு அருகே இஸ்லாமியர்கள் கடை நடத்த தடை விதிக்கப்பட்டது.