தற்போதும் உலகத்தையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் கொரோனவின் தாயகம், சீனாவாகுமென்பது உண்மையாகும். எனினும், அதனை சீனா முழுமையாகவே மறுத்து இருந்ததுடன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகளையும் அங்கு செல்வதற்கு இடமளிக்கவில்லை.
Month: June 2022
உலக உணவு நெருக்கடி: அடுப்பிலிருந்து நெருப்புக்குள் இலங்கை
அனைவருக்கும் மூவேளை உணவு: பிரதமர்
நாடு பொருளாதார சிக்கலிலிருந்து மீள நடுவழிப்பாதை என்று ஒன்று உண்டா? Galle Face போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தே ஆகவேண்டும்.
(சஞ்ஜீவ பட்டுவத்த – தமிழில் மனோறஞ்சன்)
கடந்த ஆறு மாதங்களில் வீழ்ச்சியடைந்த இலங்கையின் பொருளாதாரம், ஏப்ரல் கடைசி வாரத்தில் பெரும் பாதாளத்தின் விளிம்பை அண்மித்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில், அதிகபட்சமாக மே 15 ஆம் தேதி ஆகும்போது, அது எத்திசையை நோக்கி நகரும் என்று கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. இந்திய கடன் சலுகைகளின் கீழ் எரிபொருள் நெருக்கடியானது நீறுபூத்த நெருப்பாக மறைக்கப்பட்டிருந்தாலும், தற்போது நடைபெறும் எரிவாயு விநியோகம் இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.
பதவி விலக முடியாது: ஜனாதிபதி கோட்டா
தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது என்றும் தனக்கு 5 வருடங்களுக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தாம் பதவி விலகப்போவதில்லை எனவும் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
’பணயக் கைதியாக புதிய பிரதமர் ரணில்’
21 ஆவது திருத்தம் இன்று அமைச்சரவையில்
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று அமைச்சரவையில் நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. கட்சித் தலைவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் விரைவில் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
’மனித பேரழிவை ஏற்படுத்த முயற்சி’
’ரஷ்ய விமான பிரச்சினை சர்வதேச பிரச்சினையாகியுள்ளது ’
இனவாதம் தடை செய்யப்பட வேண்டும் – குமார் குணரட்னம்
முன்னணி சோசலிஸ்ட் கட்சி (FSP) என்பது மற்றவர்களுடன் சேர்ந்து அரசாகத்திற்கு எதிரான பொதுப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு கட்சியாகும். அதன் பொதுச் செயலாளர் குமார் குணரத்னம் அவர்களிடம் அரச எதிர்ப்புப் போராட்டத்தின்; எதிர்காலம் மற்றும் அவரது திட்டங்கள் குறித்து டெய்லி மிரர் பத்திரிக்கையின் கேள்விகளும் அவரது பதில்களும்.