தொடர்ந்து சிதைந்து வரும் பாகிஸ்தான்-ஈரான் உறவுகள்

எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தானும் ஈரானும் நீண்ட காலமாக பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில், இஸ்லாமாபாத் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய பின்னர், 107 பாகிஸ்தான் அகதிகளை ஈரான் நாடு கடத்தியது.

இலங்கையின் மின்சக்தியை கபளீகரம் செய்யும் இந்தியா

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையர்களின் இன்றைய நெருக்கடி, அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றவியலாத ஓர் அரசாங்கமும் அதை வீட்டுக்கு அனுப்பவியலாத மக்களும் பேச்சு மன்றமாய் பாராளுமன்றமும் திகழ்கின்ற ஒரு நாட்டில், எதிர்பார்ப்பதற்கு அதிகமில்லைத் தான்!

போராளிகளை விசாரிக்காமல் மாபியாக்களை கண்டுபிடியுங்கள்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தொந்தரவு செய்யாமல் எரிபொருளை பதுக்கும் மாபியாக்களை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவினர் முன்வரவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இலங்கைக்கு 20 மில். டொலர் உதவி: ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு

இன்று நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில், இலங்கையின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த மேலதிகமாக 20 மில்லியன் டொலர் கூடுதல் உதவியாக வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கை நடவடிக்கை

உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில்
மேற்கொள்ளப்பட்டு வரும் இளைஞர் கழகங்களுக்கிடையிலான வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கை நடவடிக்கை மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திருகோணமலை பீலியடி பகுதியில் செய்கை பண்ணப்பட்டுள்ள கத்தரி, வெண்டி, கொச்சி மற்றும் மரவள்ளி போன்ற பயிர்கள் சிறப்பாக காணப்படுகின்றன.

சட்டமா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்து, விமான நிலைய சேவைகள் நிறுவனம், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் இன்று (28) நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது. 

கட்டாரிடம் கடன் வசதி கேட்டது இலங்கை

பெற்றோலியம் மற்றும் எரிவாயு விநியோகத்துக்கான சாத்தியமான கடன் இணைப்பு வசதி பற்றி, அபிவிருத்திக்கான கட்டார் நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்துடன்  கலந்துரையாடப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் முழுமையாக நிறுத்தம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின், கொலன்னாவையில் உள்ள மொத்த களஞ்சியசாலையில் இருந்து எரிபொருள் விநியோகம் செய்யும் நடவடிக்கை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

பொய் பொய் பொய்

(என்.கே.அஷோக்பரன்)
இந்தா இன்றைக்கு எரிபொருள் கப்பல் வருகிறது. இல்லை, ஒரு சின்ன சிக்கல், ஒருநாள் கழித்துத்தான் எரிபொருள் கப்பல் வரும். இல்லை கப்பல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வராது. இப்படி வராத கப்பல், இன்றைக்கு வருகிறது, நாளைக்கு வருகிறது என்று ஆயிரம் பொய்க்கதைகளை சொல்லி தனக்கிருந்த கொஞ்ச மரியாதையையும் கெடுத்துக்கொண்டிருக்கிறார் இலங்கையின் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர.

வகுப்புக்குச் சென்ற மாணவர்கள் காட்டிலிருந்து பிடிப்பட்டனர்

பதுளை நகரில் பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்லும் சில மாணவர்கள், போதைப் பொருள்களைத் தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பெற்றோர் தமது பிள்ளைகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு, பதுளை தொகுதிக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சுஜித் வெதமுல்ல தெரிவித்துள்ளார்.