ஆப்கான் நிலநடுக்கத்தில் 1,000 பேர் மரணம்: 1,500 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் இன்று (22) அதிகாலை ஏற்றபட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், சுமார் 1,000 பேர் மரணமடைந்துள்ளனர். இடுபாடுகளுக்குள் சிக்கி 1,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

“மக்களே பொறுப்பாளர்கள்” என்ற பசிலின் வாதம் சரியானதே!

(எம்.எஸ்.எம். ஐயூப்)

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, அதனை அறிவிப்பதற்காக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது கூறியவற்றில், ஒரு கருத்தைத் தவிர ஏனைய அத்தனையும் அர்த்தமற்றவை என்றே கூற வேண்டும்.

நெருக்கடியான நேரத்தில் பின்னடிக்கும் சீனா

இலங்கையின் பொருளாதாரத்தை ஆடங்காணச் செய்ததில், சீனாவின் வகிபாகத்தை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடவே முடியாது. அந்தளவுக்கு கடனுக்கு மேல் ​கடனைக்கொடுத்து, கடனை செலுத்துவதற்கு அதிக வட்டியுடன் கடனைக் கொடுத்து உபதிரவம் செய்துவிட்டது.

’காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை அமெரிக்காவே பாதுகாக்கிறது’ – விமல் வீரவன்ச

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அனைவரையும் கைதுசெய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தபோது, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேரடியாக தலையிட்டு அதனை தடுத்ததாக  சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.

’விரிசலை நிவர்த்திக்க புட்டினுக்கு கோட்டா கோல் எடுக்கவேண்டும் ’

இலங்கை -ரஷ்யாவிற்கு இடையில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால விரிசல்களை சரிசெய்து கொள்ளவும், இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமைகளில் ரஷ்யாவின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளவும் இலங்கை ஜனாதிபதி உடனடியாக ரஷ்ய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மடெரி இலங்கை தரப்பிற்கு வலியுறுத்தியுள்ளார்.

இந்திய உயர்மட்டக்குழு வருகிறது

இந்திய உயர்மட்டக்குழு தூதுக்குழு, இலங்கைக்கு நாளை (23) விஜயம் செய்யவிருக்கின்றது. பிரதான பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழுவினரே இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு ஒத்துழைப்பு நல்குவது குறித்து இந்தத் தூதுக்குழு கூடுதல் கவனம் செலுத்தும். அந்த தூதுக்குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவர்.

பழைய முறையிலேனும் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும்

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு தேவையான புதிய தேர்தல் திருத்தச் சட்டங்களை கொண்டுவர முடியவில்லை என்றால், பழைய தேர்தல் முறையிலாவது மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு பரிந்துரைத்துள்ளது.

ஜேவிபி, மக்கள் சக்தி சபையை புறக்கணித்தது

இந்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை. மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆகையால், அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்கிவிட்டு, இவ்வாரம் சபை அமர்வை நாங்களும் புறக்கணிக்கின்றோம் என ஜே.வி.பியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் எம்.பியுமான அனுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் அறிவித்தார்.

கூட்டமைப்புக்கு சரத் எச்சரிக்கை

பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, இன்று (21) எச்சரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.