சாய்பல்லவி

பிரபலமான நடிகை என்பதை தாண்டி சாய்பல்லவி ஒரு பெண். பிறப்பிடம் நீலகிரி. தன் தாய்மொழி படுகு.  அந்த மக்களைப் பொருத்தவரை திருவிழாக்கள் என்றால் வெள்ளுடைதான் குறியீடு.

நாட்டைக் காப்பாற்ற இரட்சகர்களைத் தேடுதல்

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கை தீவு மிகப்பாரதூரமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து நிற்கிறது. இதனை நெருக்கடி நிலை என்று விளிப்பது, அதன் பாரதூரத்தன்மையை குறைத்துக் குறிப்பிடுவதாகவே அமையும். நிலைமை அவ்வளவு மோசமாகவுள்ளது.

டொலர் வரக்கூடிய ஒரு வழி

(ச.சேகர்)

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் நாட்டின் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையாகும். குறிப்பாக டொலர்கள் இன்மையினால் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டிய, அடிப்படை இறக்குமதிப் பொருட்களுக்குக் கூட கொடுப்பனவுகளை மேற்கொண்டு இறக்குமதி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

“கோட்டா கோ கம” எதிர்ப்பாளர்கள் 19 பேர் கைது

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் “கோட்டா கோ கம” எதிர்ப்பாளர்கள் 19 பேர், இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலக வாயில்களை மறைத்து, உள்ளே செல்லவிடாது தடுத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ​பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21ஆவது திருத்தத்துக்கு அங்கிகாரம்

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலம் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு அங்கிகாரம் பெற்றக்கொள்ளப்பட்டது. சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இந்த திருத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதுடன், இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கவோ அல்லது எதிர்காலத் தேர்தலில் போட்டியிடவோ முடியாது என்ற சரத்து திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தியாகிகள் தினம்

(தோழர் ஜேம்ஸ்)

சேய் குவேராவை பொலிவியாவில் வைத்து கொலை செய்து அவரின் போராட்ட வாழ்வை முடிவிற்கு கொண்டவராவிட்டால் இன்னும் பல நாடுகள் அன்றைய காலகட்டத்தில் விடுதலை பெற்றிருக்கும். அதற்கான முன்னெழுச்சிகளை அவர் தனது விடுதலைப் பயணம் மூலம் ஏற்படுத்தியிருப்பார்.

அகதி தஞ்சம் கோரிச் சென்ற இலங்கையர்கள்

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சட்ட விரோதமாக  தமிழகத்திற்கு  செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தனுஷ்கோடியை அடுத்த ஒன்றாம் தீடை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (17) இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண், 4 சிறுவர்கள் உட்பட 7 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மன்னார் வளைகுடா கடலில் கிடைத்த அதிஷ்டம்

பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று 90க்கும் அதிகமான  மீன்பிடி  விசைப் படகுகளில் 1000க்கும் அதிகமான  மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று, இன்று அதிகாலை(16) கரை திரும்பினார்கள். இவ்வாறு கரை திரும்பிய மீனவர்களுக்கு, உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் நகரை, பரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களும் அதே போல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, பாறை, முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்களின் வரத்தும் எதிர்பார்த்த அளவு கிடைத்துள்ளதால் மீனவர்கள்  மகிழ்ச்சியடந்துள்ளனர்.

சீனாவுக்கு எதிரான கூட்டணிகள் வலுவடைகின்றன

சீனாவின் பொருளாதார திட்டத்தையும் அதன் இராஜதந்திரத்தை வெறும் அளவுக்கு பலநாடுகள் அதிரடியான தீர்மானங்களை எடுத்துக்கொண்டிருக்கின்றன. இதனிடையே, பல நாடுகளில் சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார திட்டங்கள் யாவும் சீர்குலைந்துவருகின்றன.