தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள விதிமுறைகளை தளர்த்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் நேற்று கொழும்பு கோட்டையில் நடைபெற்ற கைத்தொழில் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தி, அந்நிய செலாவணியை விரைவாக ஈட்ட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
Month: June 2022
முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் அதிகரித்துள்ளதால், மக்களின் வரிசைகள் அதிகரித்துள்ளதுடன், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. பொருளாதார, எரிபொருள், எரிவாயு நெருக்கடி காரணமாக மக்கள் எல்லா இடங்களிலும் கொந்தளித்துப் போயிருப்பதால், நிலைமை சமூகமாகும் வரை அரச சேவைகள் மற்றும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை ஒன்லைன் மூலம் நடத்த அரசு ஆராய்ந்து வருகிறது. இதனால், ஊரடங்கோ , பொதுமுடக்கமோ அமுல்படுத்தப்படும் வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை….
வீட்டுத்தோட்டத் திட்டத்தால் உணவு பஞ்சத்தை எதிர்கொள்ள முடியுமா?
(எம்.எஸ்.எம். ஐயூப்)
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலங்கையில் மிக விரைவில் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படப் போவதாக, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பலர் கூறுகிறார்கள். கடந்த வருடம், இரசாயன பசளை இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடையின் காரணமாக, உள்நாட்டு உணவு உற்பத்தி வெகுவாகப் பாதித்தமையும் நாடு எதிர்நோக்கியிருக்கும் வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையின் காரணமாக உணவு இறக்குமதி செய்ய முடியாமல் இருப்பதுமே, இந்த அச்சத்துக்கு காரணங்களாகும்.
மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்
காணி வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு
நெருக்கடியிலும் நாட்டை படுகுழியில் தள்ளும் பௌத்த பேரினவாதம்
மறக்கப்படுகிறதா தமிழ்த் தேசியம்?
(என்.கே. அஷோக்பரன்)
ராஜபக்ஷ எனும் ‘கோலியாத்’தை, காலம், சாபம், அவர்கள் செய்த பாவம் என்று எல்லாம் சேர்ந்து வீழ்த்திக் கொண்டிருக்கின்றன என்று சொல்வது பொருத்தமற்றதல்ல! இலங்கை அரசியலில், அசைக்க முடியாத சக்திகள் தாம் என்பதை, ராஜபக்ஷர்கள் 2019-2020 தேர்தல்களில் நிரூபித்து, இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ராஜபக்ஷர்கள், தமது 2015ஆம் ஆண்டு தோல்விக்குப் பிறகு, திட்டமிட்டு, இனவாத உரத்தைக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கி, இன-மத தேசியவாதத்தை முன்னிறுத்திப் பெற்ற பெரும் தேர்தல் வெற்றி, இன்று தவிடுபொடியாகிய நிலையில் நிற்கிறது.
காலி முகத்திடல் போராட்டத்தின் காலாவதி
கடலில் வைத்து 64 பேர் கைது
சட்டவிரோதமான முறையில், நாட்டைவிட்டு தப்பியோட முயன்ற மேலும் 64 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்குக் கடலில் வைத்தே இவர்கள், இன்று (15) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.