இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை நல்குவேன் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அறிவித்துள்ளார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Month: June 2022
மண்டைதீவு படுகொலைகளின் 36ஆவது நினைவு தினம் இன்று.
’மோடியின் குளறுபடிகள் இலங்கையிலும்’
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் குளறுபடிகள் தற்போது பாக்கு நீரிணையையும் கடந்து இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சுமத்தியுள்ளார். மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு இந்திய பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
தென்னக்கும்பரவில் பதற்றம்
கண்டி, தென்னக்கும்பரவில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்பாக பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இதனால், கண்டியிலிருந்து தென்னக்கும்புரவை கடந்து செல்லவேண்டிய வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. அதேபோல, தென்னக்கும்பரவை கடந்து கண்டிக்கு வரவேண்டிய வாகனங்களும் வரிசையில் நிற்கின்றன.
சிறுபான்மையினர் முன்னேற்றத்தை தடுக்கவே இராணுவம் குவிப்பு
தமிழர்கள் போன்றே முஸ்லிம்களும் முன்னேற கூடாது என்பதற்காக, இராணுவத்தை வடக்கு, கிழக்கில் குவித்துள்ளனர்.இலங்கை இராணுவத்தின் கட்டமைப்பில் 20 டிவிசன்கள் இருக்குமாயின் அதில் 16 டிவிசன்கள் வடக்கு, கிழக்கில் இருக்கின்றன என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நெருக்கடியில் இருந்து மீள 18 மாதங்கள் செல்லும்
இலங்கை விவகாரம்: ஜெய்சங்கர் விளக்கமளிப்பார்
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் குறித்து வெளிவிவகாரங்களுக்கான பாராளுமன்ற ஆலோசனைக் குழுவிற்கு ஜூன் 18ஆம் திகதி விளக்கமளிக்கவுள்ளார்.
21 இன்று மீண்டும் அமைச்சரவைக்கு
சாணக்கியனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: பிரதமர்
உறுப்பினர்களின் எம்.பிக்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் சாணக்கியன் எம்.பி ஆற்றிய உரையொன்று தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
புலம்பெயரும் தொழிலாளர்களைக் கணக்கெடுத்தால் என்ன?
ராமேஸ்வரத்துக்கும் வடஇந்தியர்களுக்குமான தொடர்பு நாட்பட்டது. அது ஆன்மிகத்தால் வந்தது. வடஇந்தியர்கள் ராமேஸ்வரம் வருவது ராமநாதரை வழிபடுவதற்காக. ஆனால், சமீபத்தில் ராமேஸ்வரத்தில் இரண்டு வடஇந்தியத் தொழிலாளர்களைக் குறித்து வெளியான செய்திக்கும் ஆன்மிகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தத் தொழிலாளர்கள் ஒரு ராமேஸ்வர மீனவப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தி, அவரை எரித்துக் கொன்றும் விட்டார்கள்.