(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இலங்கை, இன்று ஒரு முட்டுச்சந்தில் நிற்கிறது. புதிய ஜனாதிபதியின் வருகை எதையுமே மாற்றிவிடப் போவதுமில்லை; இலங்கையில் ஜனநாயகம் மலரப்போவதும் இல்லை.
The Formula
இலங்கை மக்களுக்காக இந்தியா உதவி செய்ய தயாராகவுள்ளதாக இந்திய ஜனாதிபதி திரொளபதி முர்மு தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிற்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரம் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றின் மூலம் குறித்த வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளது. இதேவேளை மக்களின் ஆழமான உறவுகளின் அடிப்படையில் நீண்டகால இருதரப்பு கூட்டாண்மை மேலும் வலுவடையும் என இந்திய ஜனாதிபதி திரொளபதி முர்மு மேலும் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் 22ஆம் திருத்தத்தை மீண்டும் திருத்தி, 19 ஆம் திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட விடயங்களையும், அதில் இருந்த பலவீனமான சரத்துக்களை நீக்கி 19ஐ விஞ்சிய புதிய திருத்தும் ஒன்றினை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
காலி முகத்திடல் பேராட்டத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக ‘ப்ளக் கெப்’ இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்தப்போராட்டம் தற்போது காலி முகத்திடலில் ஒரு சிறு நிலத்தில் இடம்பெறுவதற்கு மாறாக பரந்த அரசியல் வெளியில் நடைபெறுவதாகவும் அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டத்தில் அடையாள வெற்றிகள் கிடைத்துள்ளதாகவும் தொடர்ந்தும் அங்கிருந்து போராட வேண்டிய அவசியமில்லை எனவும் ‘ப்ளக் கெப்’ இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.
முன்னிலை சோஷலிச கட்சியின் அலுவலகத்தில் பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர். முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின் நுகேகொடை அலுவலகத்தில் இன்று காலை பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.